sms அனுப்பி காதலிகளுக்கு கொடுமை - காதலன் கைது !

Report Print Pious in உலகம்

நோந்த் நகரத்தில் 29 வயது இளைஞன் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது இரண்டு பெண் நண்பிகளை கொடுமைப் படுத்தி உள்ளார்.

காவற்துறையினரின் தகவலின்படி, இவர்களில் ஒருவரை, தொலைபேசியினாலேயே தொல்லைப்படுத்தி உள்ளார்.

இவரின் காதலியாகவிருந்த ஒரு பெண்ணிற்கு 3000 குறுஞ்செய்திகளை அனுப்பி மிகவும் தொல்லை செய்துள்ளார். இந்தக் குறுஞ்செய்திகளிற்கப் பதில் வராமல் போக, 200 மின்னஞ்சல்களை இடைவிடாது அனுப்பியுள்ளார்.

அதையும் தாண்டி, நூற்றுக்கணக்காக கடிதங்கள், 30 பொதிகள் என இடைவிடாது அனுப்பி, அந்தப் பெண்ணை விரக்தியின் உச்சத்திற்குத் தள்ளி உள்ளார் இவரினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது பெண்ணிற்கு 24 வயது மட்டுமே.

கடந்த 2017 ஜுலை மாதம் முதல், நவம்பர் மாதம் வரை, இந்தப் பெண்ணின் வீட்டிற்குள் யன்னல்களை உடைத்து உள்நுழைந்து. அவரின் உள்ளாடைகளையும் படங்களையும் திருடிச் சென்றதோடு, அவரது சிற்றுந்தையும் சேதப்படுத்தி உள்ளார்.

நீதிமன்ற விசாரணைவரை, சட்டக் காவலில் வைக்கப்பட்டுள்ள இவர், விரைவில் விசாரிக்கப்பட்டுத் தண்டனை வழங்கப்பட உள்ளார்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers