இந்த நாடுகளுக்கும் தடுப்பூசியை கொண்டு சேர்ப்பதன் மூலமே கொரோனா முழுமையாக ஒழியும்: WHO தலைவர்

Report Print Karthi in உலகம்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை கடந்துள்ள நிலையில் தொற்றை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் முழு ஒத்துழைப்பு அவசியம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

ஏழை நாடுகள் கொரோானா தொற்றுக்கான தடுப்பூசியை பெறுவதை அனைத்து நாடுகளும் உறுதி செய்வது மட்டுமே உலகம் கொரோானா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழியென பெர்லினில் நடைபெற்று வரும் உலக சுகாதார மூன்று நாள் உச்சி மாநாட்டில் டெ்ரோஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளும் தங்களின் குடிமக்களை பாதுகாக்க நினைப்பது இயற்கையான ஒன்று. எனவே வீரியமான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுமாயின் அதனை அனைத்து நாடுகளுக்கும் தடையின்றி விநியோகிக்க வேண்டும்.

நான் ஒன்றை தெளிவாக சொல்கிறேன். தடுப்பூசியை தேசியவாதமாக மாற்றுவதன் மூலம் நிச்சயம் கொரோனா தொற்றினை ஒழிக்க முடியாது. என டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளின் ஒரு பகுதியினர் ஏற்கனவே மிகவும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசிகளை உருவாக்கும் நிறுவனங்களுடன் பெரிய ஆர்டர்களை பெற முன்பதிவு செய்துள்ளனர்.

ஆனால் சிறிய மற்றும் ஏழை நாடுகள் இது குறித்து பெரிதும் கவலை கொள்ளாமல் இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகின்றது என்று டெட்ரோஸ் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 11.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்