இரண்டாம் உலகப்போருக்கு பின் ஏற்பட்ட மாற்றத்தை உணரலாம்! கொரோனாவுக்கு பின் உலகம்? விரிவான தகவல்

Report Print Abisha in உலகம்

கொரோனா என்னும் கொடிய நோய்...! என்று நாம் நிச்சயம் இதை கூறலாம் ஏனெனில், இந்த நோயால் 5,909,0816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி தற்போது வரை 362,094 பேர் பலியாகியுள்ளனர்.

உலகை தன் கைக்குள் அடக்கி தாண்டவம் ஆடும் இந்த கொரோனா வைரஸ் இரண்டாம் உலகப்போரை போன்று பாதிப்பை காட்டிவருகிறது.

ஏனெனில், இரண்டாம் உலகப்போருக்கு பின் மிகப்பெரிய நாடுகளில் அதிக இழப்புகள் ஏற்பட்டது.

மேலும், அதில் உலக அளவில் கிட்டதட்ட 75 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகினார்.

அதுபோன்றே கொரோனாவும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க அரசுகள் உலக சுகாதார ஆகியவை பலவற்றை முன்னெடுத்தலும், எந்த முன்னேற்றமும் தற்போது வரை ஏற்படவில்லை.

எனவே கொரோனாவுக்கு பின் உலகில் ஏதேனும் புதிய விதிகள் ஏற்படுமா? என்று உங்களுக்கு தோன்றலாம்.

இரண்டாம் உலக போருக்கு பின் உலகை மீட்டெடுக்க 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, 1946ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் மற்றும் 1948ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது.

அதேபோல் கொரோனாவுக்கு பின், சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றை தனித்தனியாக பலப்படுத்த, உலக அளவில் அமைப்புகள் உருவாக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.

இது ஒரு மனித குலத்திற்கான பாடம். ஏனெனில் முன்னதாக சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற நோய்கள் பாதித்த நாடுகள் தற்போது கொரோனாவை நன்றாக கையாண்டு வருகின்றன. அதற்கு எடுத்துக்காட்டு தைவான், சிங்கபூர், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை கூறலாம்.

இந்நிலையில், 212 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவியுள்ள இந்த கொரோனாவின் தாக்கத்தால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? என்பதை பார்க்கலாம்.

பொருளாதாரம்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக பொருளாதாரத்தில் 148 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று ஐ.நா வர்த்தகம் மற்றும் மேம்பாடு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில், வளர்ந்து வரும் நாடுகளில் மட்டும் 16லட்சத்து 28ஆயிரம் கோடி இழப்பு எற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் சீனா சேர்க்கப்படவில்லை.

உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ராபர்ட்டோ அஸிவெடோ நாம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பொருளாதார இழப்பை நிச்சயம் சந்திக்க நேரிடும் என்று ஏப்ரல் மாத துவக்கத்தில் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை இழப்பு

கொரோனாவால் மக்கள் அதிகம் சத்திக்க இருப்பது வேலை இழப்புதான். உலக அளவில் 330கோடி தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 200கோடி பேர் முறைசாரா அமைப்பில் பணியாற்றி வருகின்றனர். இதில், 160கோடி பேர் வேலையை இழக்க நேரிடலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கல்வி முறையில் மாற்றம்

கல்வி முறையில் பெரும் மாற்றம் ஏற்படலாம் ஏனெனில், சமூக இடைவெளி மிக முக்கிமான ஒன்றாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவும் அடுத்துவரும் காலங்களில் நிச்சயிக்கப்படாத நாட்கள் வரை சமூக இடைவெளி கடைபிடிப்பது மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

எனவே மாணவர்களுக்கு ஓன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்படும். தற்போது சில நாடுகளில் இதுபோன்ற வகுப்புகள் செயல்பட்டு வந்தாலும், வளர்ந்து வரும் நாடுகளில் இந்த திட்டம் அமலில் இல்லை. ஆனால், இந்த சூழலை கருத்தில் கொண்டு அனைத்து நாடுகளும் ஓன்லைன் வகுப்புகளுக்கு முக்கித்துவம் வழங்க நேரிடும்.

விருப்பத்துக்கும் மீறி பிறக்கும் குழந்தைகள் அதிகரிக்கும்

தற்போது கிட்டத்தட்ட 114 நாடுகளில் 5 கோடிக்கும் அதிகமான பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த சூழலில், 4 கோடியே 70 லட்சம் பேருக்கு கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல் போயுள்ளது. இதனால், 70 லட்சத்துக்கும் அதிகமானோர், கர்ப்பமடைய வாய்ப்புள்ளது. எனவே குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுமைகள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது என்று ஐ.நா மக்கள் நிதியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்