கொரோனாவில் இருந்து குழந்தைகளை காக்க கிரேட்டா தன்பெர்க் வழங்கிய நிதியுதவி! எவ்வளவு தெரியுமா

Report Print Abisha in உலகம்

கொரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்படும் குழந்தைகளை காக்க பருவநிலை மாற்ற எதிர்ப்பு போராளி கிரேட்டா தன்பெர்க் $100,000 டொலர் நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஐ.நாவின் குழந்தைகள் நால அமைப்பிற்கு அவர் வழங்கியுள்ள செய்தியில், கொரோனா, பருவநிலை மாற்றத்தை போல் கொடூரமாக குழந்தைகளை பாதிக்கிறது என்ற சுட்டிக்காட்டியுள்ளார்.

குழந்தைகளை காக்க அனைவரும் ஐநாவிற்கு உதவ முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், டெனிஷ் அரசு சாரா அமைப்பு, மனித உரிமைகள் அமைப்பிற்கும் இந்த $100,000 டொலர்கள் பொருந்தும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

யுனிசெப் இது குறித்து தெரிவிக்கையில் “ஊரடங்கு, குழந்தைகளுக்கான உணவு பற்றாக்குறை, குழந்தைகளுக்கான பாதிப்புகளை குறைக்க இந்த நிதி உதவும்” என்று குறிப்பிட்டுள்ளது.

பருவநிலை மாற்றங்களுக்கு எதிராக போராடி வரும் கிரேட்டா தன்பெர்க், ஐ.நாவில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனது குரலை உயர்த்தியதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்