கொரோனா வைரஸ்!.. 13,000ஐ கடந்தது பலி எண்ணிக்கை Live Updates

Report Print Fathima Fathima in உலகம்
261Shares

உலக நாடுகளில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13,408 ஆக உயர்ந்துள்ளது, 3,07,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

ஸ்பெயினில் மட்டும் ஒரே நாளில் 324 பேர் பலியான நிலையில் ஈரானில் மது அருந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள

 • March 25, 2020
 • 12:08 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

 • ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 443 பேர் உயிரிழப்பு
 • உயிரிழந்தோர் எண்ணிக்கையில் சீனாவையும் தாண்டியது ஸ்பெயின்

 • March 25, 2020
 • 10:47 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

பிரித்தானிய இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

 • March 25, 2020
 • 09:34 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23

 • March 25, 2020
 • 08:57 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் சமூக இடைவெளி

 • March 25, 2020
 • 05:21 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் அறிகுறியாக, சுவை உணர்தல் மற்றும் வசானை உணர்தலில் பிரச்சனை ஏற்படும் என்று நிபூணர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், தகவல்களுக்கு

 • March 25, 2020
 • 04:13 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதாக அந்நாட்டு பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 • March 25, 2020
 • 04:12 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரபடி 562பேர் பாதிப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 • March 24, 2020
 • 12:15 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

உலக அளவில் கொரோனா வைரஸ்

 • March 24, 2020
 • 11:34 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக எகிப்த் நாட்டில் இரவு நேர ஊரடங்கு உத்தரைவை அந்நாட்டு பிரதமர் பிறப்பித்துள்ளார்.

 • March 24, 2020
 • 10:49 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரசால் ஒரே நாளில் 514 பேர் பலியாகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மொத்தம் அந்நாட்டில் 2,696பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 • March 24, 2020
 • 08:55 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

16ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 16,558பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்நோயால் 3,81,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 • March 24, 2020
 • 08:48 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

மதுரையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளி நிலை கவலைகிடம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 • March 24, 2020
 • 08:45 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

வேகமாக உயரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தற்போது 511பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 15பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

 • March 24, 2020
 • 07:08 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்வு. ஐக்கிய அரபு எமிரோட்ஸில் இருந்த தாயகம் திரும்பிய நபர் கொரோனா உறுதி செய்யப்பட்டு மும்பையில் சிகிச்சைபெற்ற வந்தார். அவர் தற்போது உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 • March 24, 2020
 • 06:23 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

பொலிவியன் பொலிசாரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா வைரஸ்கள் போன்று உடையணிந்த கலைஞர்கள்

 • March 24, 2020
 • 04:52 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

நிரூபிக்கப்படாத மருந்துகள் ஆபத்தை உருவக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்த போதிலும் அதிபர் டொனால் டிரம்ப் அதுகுறித்து பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிமலேரியல் மருந்துகள் கொரோனாவுக்கு பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்ட டிரம்ப் அவை கடவுள் தந்த பரிசு என்று சுட்டிகாட்டியுள்ளார்.

 • March 24, 2020
 • 04:06 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

சீனாவில், புதிதாக 78பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 74பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் - தேசிய சுகாதாரத்துறை அமைச்சகம் சீனா

 • March 24, 2020
 • 04:04 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இத்தாலியில், மொத்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 63,927 என்று சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

 • March 24, 2020
 • 03:52 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 492- சுகாதாரத்துறை அமைச்சகம்

இந்தியர்கள் 451 பேர், வெளிநாட்டினர் 41 பேர் என 492 பேருக்கு கொரோனா இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 • March 24, 2020
 • 03:50 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

தமிழகத்தில் 12பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

தமிழகத்தில் இன்று மாலை ஆறு மணி முதல் 31ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. இதனால், அவசர தேவைகள் தவிர மற்ற எதற்கும் மக்கள் வெளியில் செல்ல அனுமதியில்லை.

 • March 23, 2020
 • 11:24 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியான எண்ணிக்கை 15,000ஐ கடந்தது

 • March 23, 2020
 • 11:19 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

ஸ்பெயினில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,182 ஐ எட்டியுள்ளது. கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 462பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

 • March 23, 2020
 • 10:02 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

தமிழகத்தில் நாளை மாலை 6மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. அதன்படி அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்படும்.

 • March 23, 2020
 • 09:57 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரைத்துள்ளது இந்திய அரசு

 • March 23, 2020
 • 08:32 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களை தாங்களே தனிமைபடுத்தி கொள்ளாமல் சுற்றித்திரிந்தால், அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 • March 23, 2020
 • 06:54 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இன்று கடைபிடிக்கப்பட்ட சமூகஇடைவெளி

 • March 23, 2020
 • 06:18 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் 415பேருக்கு கொரோனா உறுதி : சுகாதாரத்துறை அமைச்சர்

 • March 23, 2020
 • 03:32 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இருந்து கனடா விலகியுள்ளது. அதன்படி இந்த போட்டிகள் நடைபெற்றாலும் கனடா பங்கேற்காது.

 • March 22, 2020
 • 12:29 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

 • March 22, 2020
 • 12:26 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இத்தாலியில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில், 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்ட சீனாவில் இதுவரை 3,261 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் தினந்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,825 ஆகியுள்ளது என்கிறது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரம்.

 • March 22, 2020
 • 12:22 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

மாட்ரிட் கண்காட்சி மையம் மாபெரும் மருத்துவமனையாக மாற்றப்படுவதால், 'கடினமான நாட்களுக்கு' தயாராக இருக்குமாறு ஸ்பானிஷ் பிரதமர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 • March 22, 2020
 • 04:40 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் சுய ஊரடங்கு உத்தரவு

"இப்போதிலிருந்து சில நிமிடங்களில், மக்கள் ஊரடங்கு தொடங்குகிறது. நாம் அனைவரும் இந்த ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக இருப்போம், இது COVID-19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகப்பெரிய பலத்தை நமக்கு கொடுக்கும். இப்போது நாம் எடுக்கும் நடவடிக்கைகள் வரவிருக்கும் காலங்களில் நமக்கு உதவும், "- பிரதமர் மோடி

 • March 22, 2020
 • 04:36 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

 • March 22, 2020
 • 04:32 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இரானில் ஃபார் எனப்படும் மாகாணத்தில் கொரோனாவில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள பலரும் மது அருந்தியுள்ளனர்.

அங்கு கொரோனாவால் 13 பேர் உயிரிழந்த நிலையில், மது அருந்திய காரணத்தினால் 66 பேர் பலியாகி உள்ளதாக ஃபார் மாகாணத்தின் அவசர சேவை மைய இயக்குநர் மொஹமத் ஜாவத் அந்நாட்டு அரசு ஊடகத்திடம் தெரிவித்தார்.

 • March 21, 2020
 • 03:21 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

 • March 21, 2020
 • 03:16 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600-ஐ கடந்து, மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அனைத்து வெளிநாட்டு விமானங்களுக்கும் 14 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 • March 21, 2020
 • 03:08 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவுவதால் உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ் பிரான்ஸ், ஜேர்மனி, நைஜீரியா, நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி ஆகிய அனைத்து பகுதிகளுக்கும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

 • March 21, 2020
 • 11:11 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 298 ஆக அதிரித்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

 • March 21, 2020
 • 10:38 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

22ஆம் திகதி சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைக்க நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

 • March 21, 2020
 • 10:32 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

ஈரானில், கொரோனாவால் இன்று 123பேர் பலியாகியுள்ளர். மொத்த பலி எண்ணிக்கை 1556

 • March 21, 2020
 • 10:06 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரை மூடப்பட்டுள்ளது.

வெறிச்சோடி காணப்படும் கடற்கரையின் வீடியோ

 • March 21, 2020
 • 10:01 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் உள்ள முக்கிய கடற்கரைகள் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று 3மணியில் இருந்து மறு அறிவிப்பு வரும்வரை கடற்கரைகளில் யாரும் கூட அனுமதியில்லை.

 • March 21, 2020
 • 09:38 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இலங்கைக்கு வருகை தந்திருந்த மதபோதகருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் சுவிட்சர்லாந்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

 • March 21, 2020
 • 06:17 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

தாய்லாந்தில் ஒரே நாளில் 89பேருக்கு கொரோனா பாதிப்பு. மொத்தம் அந்நாட்டில் 411பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 • March 21, 2020
 • 06:02 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல் கொரோனா பலி பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் இருந்து திரும்பியா 78 வயது நபர் பலியாகியுள்ளார்.

மேலும், 58வயது நபர் ஒருவர் சிறுநீர் பாதிப்பு அடைந்த நபரும் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளார்.

அந்நாட்டில் 140பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 • March 21, 2020
 • 05:46 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியா :பாதிப்பு எண்ணிக்கை 271

 • March 21, 2020
 • 04:59 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் பலி எண்ணிக்கை 3 என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் அந்நாட்டில் கொரோனாவால் 500பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 • March 21, 2020
 • 04:48 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனாவால் அமெரிக்காவில் 250பேர் பலியாகியுள்ளனர்.

18,763பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சி.என்.என் கணிப்பு படி தற்போதுவரை 250பேர் பலியாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட மாகாணங்களின் பட்டியல்

 • Alabama: 106 cases
 • Alaska: 14 cases
 • Arizona: 63 cases, 1 death
 • Arkansas: 100 cases
 • California: 1,077 cases, 24 deaths
 • Colorado: 363 cases, 4 deaths
 • Connecticut: 194 cases, 4 deaths
 • Delaware: 39 cases
 • District of Columbia: 77 cases, 1 death
 • Florida: 514 cases, 9 deaths
 • Georgia: 420 cases, 13 deaths
 • Guam: 12 cases
 • Hawaii: 37 cases
 • Idaho: 23 cases
 • Illinois: 585 cases, 5 deaths
 • Indiana: 79 cases, 3 deaths
 • Iowa: 45 cases
 • Kansas: 44 cases, 1 death
 • Kentucky: 63 cases, 2 deaths
 • Louisiana: 537 cases, 14 deaths
 • Maine: 56 cases
 • Maryland: 149 cases, 2 deaths
 • Massachusetts: 413 case, 1 death
 • Michigan: 549 cases, 3 deaths
 • Minnesota: 115 cases
 • Mississippi: 80 cases, 1 death
 • Missouri: 47 cases, 2 deaths
 • Montana: 15 cases
 • Nebraska: 32 cases
 • Nevada: 109 cases, 2 deaths
 • New Hampshire: 55 cases
 • New Jersey: 890 cases, 11 deaths
 • New Mexico: 43 cases
 • New York: 8,377 cases, 53 deaths
 • North Carolina: 137 cases
 • North Dakota: 26 cases
 • Ohio: 169 cases, 1 death
 • Oklahoma: 49 cases, 1 death
 • Oregon: 88 cases, 3 deaths
 • Pennsylvania: 268 cases, 1 death
 • Puerto Rico: 8 cases
 • Rhode Island: 54 cases
 • South Carolina: 125 cases, 1 death
 • South Dakota: 14 cases, 1 death
 • Tennessee: 228 cases
 • Texas: 202 cases, 5 deaths
 • US Virgin Islands: 3 cases
 • Utah: 112 cases
 • Vermont: 29 cases, 2 deaths
 • Virginia: 114 case, 2 deaths
 • Washington: 1,513 cases, 82 deaths
 • West Virginia: 8 cases
 • Wisconsin: 206 cases, 3 deaths
 • Wyoming: 18 cases

 • March 21, 2020
 • 04:28 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனா தொற்று 63பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • March 21, 2020
 • 04:17 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியா: மாநில அளவில் பாதிப்பு எண்ணிக்கை

 • March 21, 2020
 • 04:14 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்தடுத்து இரண்டுபேர் சிங்கப்பூரில் பலியாகியுள்ளனர். இதில், 74வயதான சிங்கபூரை சேர்ந்த பெண் ஒருவரும், 64வயதான இந்தோனேசியாவை சேர்ந்த ஆண் ஒருவரும் பலியாகியுள்ளனர். இதுவே அந்நாட்டில் முதல் கொரோனா பலியாகும்.

 • March 21, 2020
 • 03:56 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 258ஆக உயர்வு - சுகாதாரத்துறை அமைச்சர்

 • March 21, 2020
 • 03:51 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

சமூக இடைவெளியை உணர்த்தும் படங்கள்

 • March 21, 2020
 • 03:46 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கனடா-அமெரிக்க எல்லைகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தற்போது செயல்பட்டு வரும் நிலையில், இன்று இரவு முதல் முழுவதும் மூட கனட பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விவரங்களுக்கு

 • March 20, 2020
 • 01:57 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

அர்ஜென்டினாவில் நாடு தழுவிய முடக்கம்

தென் அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் முடக்கத்தை அறிவித்த முதல் நாடாக அர்ஜெண்டினா உருவெடுத்துள்ளது. இதன்படி, மார்ச் மாத இறுதிவரை உணவு மற்றும் மருத்துவத்தை தவிர்த்து வேறெந்த காரணத்திற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 • March 20, 2020
 • 01:56 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

மசோதாவில் கையெழுத்திட்ட ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்காவில் இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு மட்டுமின்றி இந்த நோய்த்தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் ஊதியத்தை உறுதிசெய்யும் திட்டம் உள்ளிட்டவற்றிற்காக 100 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்யும் மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

 • March 20, 2020
 • 01:54 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

சௌதி அரேபியாவில் கட்டுப்பாடுகள்

சௌதி அரேபியாவில் 238 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மெக்கா மசூதியிலும் மெதினாவில் உள்ள நபிகள் நாயக மசூதியிலும் தொழுகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மசூதியின் சுற்று வட்டார பகுதிகளிலும் கூட்டமாக தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 • March 20, 2020
 • 11:46 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் 223 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 32பேர் வெளிநாட்டினர்.

 • March 20, 2020
 • 10:56 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

ஸ்பெயின் நாட்டில் 1000க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா, இத்தாலி மற்றும் ஈரானுக்கு அடுத்து ஸ்பெயின் கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 • March 20, 2020
 • 10:11 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் நுழைய தடைவிதித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய குடிமக்களாக இருந்தாலும் இக்கட்டான இவ்வேளையில் அவர்கள் நாடுதிரும்பினால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில், 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், 6பேர் உயிரிழந்துள்ளனர்.

 • March 20, 2020
 • 09:08 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து ஏப்ரல் 15-ஆம் திகதிக்கு பின்பே தெரிய வரும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த மாதம் தொடங்க இருந்த ஐ.பி.எல் போட்டி தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 • March 20, 2020
 • 08:57 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவின் பாடகி Kanika Kapoor லண்டன் சென்று திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • March 20, 2020
 • 08:53 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

காலிப்போர்னியாவின் ஆளுநர் Gavin Newsom மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

 • March 20, 2020
 • 08:48 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

பித்தானியர்கள் தற்போது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரித்தானியாவின் கால்பந்து விளையாட்டு மேலாளர் Gareth Southgate கேட்டுக்கொண்டுள்ளார்.

 • March 20, 2020
 • 06:31 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்தது!

 • March 20, 2020
 • 05:48 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு. ராஜஸ்தான் மாநிலத்தில் சிகிச்சை பெற்றுவந்த இத்தாலியை சேர்ந்த 69வயது நபர் உயிரிழந்துள்ளார். அவர், கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், மாரடைப்பால் பலியாகியுள்ளார்.

 • March 20, 2020
 • 05:36 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 206ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

 • March 20, 2020
 • 05:15 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று காரணமாக பிரித்தானியாவில் ஓய்வு பெற்ற மருத்துவர்கள், மற்றும் இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவர் மற்றும் செவிலியர் மாணவர்களை பணி செய்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், விவரங்களுக்கு

 • March 20, 2020
 • 04:57 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

சவுதிஅரேபியாவில், உள்நாட்டு விமான சேவை மற்று பொது போக்குவரத்துகளான ரயில், பேருந்து, டாக்சி ஆகியவை இரண்டு வாரங்களுக்கு நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக SPA செய்தி வெளியிட்டுள்ளது.

 • March 20, 2020
 • 04:42 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

அர்ஜென்டீனா அதிபர், மக்கள் தங்களை மார்ச் 31வரை கட்டாயமாக சுயதனிமைபடுத்தி கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

 • March 20, 2020
 • 04:27 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ஞாயிற்றுகிழமை(22.03.2020) அன்று காலை 7மணி முதல் இரவு 9மணி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது ஒரு சோதனை நிகழ்வு மட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 • March 20, 2020
 • 04:24 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

 • March 19, 2020
 • 12:06 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் மார்ச் 22 திகதி முதல் 29ஆம் திகதி வரை சர்வதேச விமானங்களுக்கு முற்றிலும் தடை.

65வயதிற்கு மேற்பட்டோர் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 • March 19, 2020
 • 11:49 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றால் பலி எண்ணிக்கை 767 ஆக உயர்ந்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 209பேர் பலியாகியுள்ளனர்.

 • March 19, 2020
 • 11:31 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில், கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.

 • March 19, 2020
 • 10:49 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3ஆக அதிகரிப்பு!

அயர்லாந்து சென்று திரும்பிய 21வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு, சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார்.

 • March 19, 2020
 • 10:33 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 52பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 4பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • March 19, 2020
 • 10:17 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

நவ்ருஸ் விழாவிற்கு தடை விதித்த ஈரான்

ஈரானில் நவ்ருஸ் விழா(அந்நாட்டின் புத்தாண்டு) நாளை நடைபெற உள்ள நிலையில், இதற்காக அந்நாட்டில் யாரும் வரவேண்டாம் என்று அரசு அதிகாரப்பூர்வ செய்தி ஊடகம் மூலம் மக்களுக்கு அறிவுத்தியுள்ளது. மேலும்,இவ்விழாவிற்காக யாரும் சாலைகளில் கூடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது

 • March 19, 2020
 • 10:06 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்திய பொருளாதார தலைநகரான மும்பையில், தினமும் 2000க்கும் மேற்பட்ட ஆண்கள், வீட்டில் உணவு சமைத்து 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக அந்த உணவு வழங்குதல் முறையை மார்ச் 31வரை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அந்த தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 • March 19, 2020
 • 08:57 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இத்தாலியில் கொரொனா வைரஸ் கட்டுக்குள் வராததால், அந்நாட்டு பிரதமர் Giuseppe Conte, நகரங்கள் முடக்கப்பட்டுள்ளதை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

 • March 19, 2020
 • 07:43 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

டெல்லியில் 5பேருக்குமேல் கூடினால் தண்டனை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய தலைநகரான டெல்லியில் 5பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில காவல்துறை எச்சரித்துள்ளது.

 • March 19, 2020
 • 07:28 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

வெளிநாட்டினருக்கு அவுஸ்திரேலியாவில் தடை

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, வெளிநாட்டினர் அந்நாட்டில் நுழைவதற்கு தடை விதித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, அவுஸ்திரேலியாவில் 636 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • March 19, 2020
 • 07:23 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று நோய்களை அடக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நாடுகள் தங்களது குடிமக்களை தனிமைப்படுத்தி, சோதித்து, தக்க சிகிச்சையளிக்க வேண்டும்" என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.

 • March 19, 2020
 • 07:16 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 166

இந்தியாவில் 166 தனி நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆய்வகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 • March 19, 2020
 • 07:11 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

சீனர்களை குணப்படுத்திய மருந்து

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் Favipiravir என்ற மருந்து பெரும்பங்கு வகிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

 • March 19, 2020
 • 07:03 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

சீனர்களை குணப்படுத்த பெரும் பங்கு வகித்த மருந்து

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் Favipiravir என்ற மருந்து பெரும்பங்கு வகிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

 • March 19, 2020
 • 05:47 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

ஸ்பெயினில் விரைவாக பரவும் கொரோனா

ஸ்பெயினில் இதுவரை 13,716 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அந்நாட்டில் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 598ஆக அதிகரித்துள்ளது.

 • March 19, 2020
 • 05:46 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் இத்தாலியில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, இத்தாலியில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுதான். இதன் மூலம் இத்தாலியில் மட்டும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்தை நெருங்கியுள்ளது.

 • March 18, 2020
 • 03:33 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

அனைத்து ஹொட்டல்களையும் மூட ஸ்பெயின் முடிவு

ஸ்பெயினில் உள்ள ஹோட்டல்கள் அனைத்தையும் மூடப்போவதாக அந்நாட்டு அரசு அறிவித்ததை அடுத்து, அங்கிருக்கும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் அனைவரும் நாடு திரும்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 • March 18, 2020
 • 01:42 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா அச்சம் காரணமாக, உலக நாடுகள் பல பயணக்கட்டுப்பாட்டுகளை அமுல்படுத்திவரும் நிலையில், விசா தொடர்பில் பிரான்ஸ் சில முடிவுகளை எடுத்துள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள

 • March 18, 2020
 • 01:39 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை

"கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதிகம் பேர் இதனால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குநர் பூனம் கெட்ரபால் சிங் தெரிவித்தார்.

 • March 18, 2020
 • 01:37 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

வெளிநாடுகளில் மொத்தம் 276 இந்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 • March 18, 2020
 • 01:36 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், புத்தளம் மாவட்டத்திற்கும், கொச்சிக்கடை போலீஸ் பிரிவிற்கும் போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 • March 18, 2020
 • 12:07 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனாவுக்கு கடன் கிடையாது

வெனிசுலாவில் உங்கள் அரசை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்காததால் கொரோனாவை கட்டுப்படுத்த உங்களுக்கு கடன் கிடையாது என நிகோலஸ் மதுரோவுக்கு சர்வதேச நிதியம் பதில் அளித்துள்ளது.

 • March 18, 2020
 • 12:04 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

வடகொரியாவில் மருத்துவமனை கட்டும் பணிகள் தொடக்கம்

வட கொரியாவில் மருத்துவமனை கட்டுவதற்காக பணிகளைத் தொடங்கி வைத்தார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் .

அந்நாட்டுத் தலைநகர் பியோங்யாங்கில் கட்டப்பட இருக்கும் மருத்துவமனைக்கு அஸ்திவாரம் போடும் பணியில் ஈடுபட்டு,பணிகளை அவர் தொடங்கி வைத்தார் என்கிறது அந்நாட்டுத் தேசிய ஊடகம்.

 • March 18, 2020
 • 11:16 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

எச்சரித்த ராகுல்காந்தி

நமது அரசாங்கத்தின் இயலாமையால் இந்தியா மிகப் பயங்கரமான விளைவை சந்திக்க போகிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 • March 18, 2020
 • 09:48 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

எங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா இல்லை

30 நாள் தனிமைப்படுத்துதல், மூடிய எல்லைகள், சீனாவுடனான வர்த்தகம் நிறுத்தம் ஆகிய விடயங்கள், வட கொரியாவை கொரோனா அற்ற நாடாக ஆக்கிவிட்டதாக அதன் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு

 • March 18, 2020
 • 09:21 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

அத்தியாவிசிய தேவைகளுக்கான பயணங்கள் நிறுத்த திட்டம்

அமெரிக்கா-கனடா இடையிலான அத்தியாவிசிய தேவைகளுக்கான பயணங்களை முடக்க இரு நாடுகளும் இணைந்து கூட்டாக முடிவெடுத்து அறிக்கை வெளியிட இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக அதிகாரி சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி 24 முதல் 48 மணி நேரம் எல்லைகள் மூடப்பட்டிருக்கும்.

 • March 18, 2020
 • 09:02 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கர்நாடக மாநிலத்தில் 13பேருக்கு கொரோனா

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார். முன்னதாக அம்மாநிலத்தில், 76 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 • March 18, 2020
 • 03:28 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

பிரான்சில் வாடகை, மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் ரத்து!

ஆவணங்கள் இன்றி வெளியில் செல்வோருக்கும், போதிய காரணங்கள் இன்றி பயணிப்போருக்கும், அல்லது குடும்பத்தினருடன், நண்பர்களுடன் கூட்டமாக செல்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • March 18, 2020
 • 03:12 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 சதவீதம் நோயாளிகளில் 97 சதவீதம் மக்கள் குணமடைந்து விடுவார்கள் என கொரோனா வைரஸ் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட முனைவர். பவித்ரா வெங்கடகோபாலன் தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு

 • March 18, 2020
 • 03:04 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் கொரோனா தொற்று

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது செவ்வாயன்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து தற்போது அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களிலும் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது.

 • March 18, 2020
 • 03:02 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

வெளிநாட்டவர்கள் நுழைய தடை- ஐரோப்பிய ஒன்றியம்

கொரானா வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக வெளிநாட்டவர்கள் நுழைய 30 நாள் தடையை விதித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 26 நாடுகளோடு, ஐஸ்லாந்து, லெச்டென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இது பொருந்தும்.

 • March 18, 2020
 • 03:01 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

உலகளவில் மொத்தம் 2 லட்சம் மக்கள் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8000 பேர் இறந்துள்ளனர்.

 • March 18, 2020
 • 02:54 AM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை உதவித் தொகையாக தர திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 • March 17, 2020
 • 08:08 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள். உங்கள் முழங்கையில் இருமல் செய்யுங்கள். 50 க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் இடத்தில் இணைய வேண்டாம்.

இது அனைவருக்கும் சவாலான நேரம். ஆனால் இந்த நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவ முடியும். நாம் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கனேடிய பிரதமர்.

 • March 17, 2020
 • 05:28 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

மலேசியாவில் இருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் மாணவர்களை மீட்க உடனடியாக விமானம் அனுப்பப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவரது ட்விட்டரில் கூறியுள்ளார்.

 • March 17, 2020
 • 05:25 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

தங்கள் நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

கூடிய விரைவில் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் நாட்டை விட்டு வெளியேறும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 • March 17, 2020
 • 05:24 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

 • March 17, 2020
 • 05:23 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

"சீன வைரஸ்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 • March 17, 2020
 • 05:21 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

 • March 17, 2020
 • 05:17 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

அஃப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது என இந்திய சுகாதார துறையின் இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

 • March 17, 2020
 • 05:16 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் இடைநிறுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவெடுத்துள்ளார்

 • March 17, 2020
 • 05:16 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவல் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருவதன் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் 'கோ ஏர்' விமான சேவை நிறுவனம் தனது சர்வதேச விமான சேவையை மார்ச் 17 முதல் ஏப்ரல் 15 வரை முற்றிலும் நிறுத்திவைத்துள்ளது.

 • March 17, 2020
 • 05:15 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

உலக சுகாதார நிறுவனத்தால் திங்கட்கிழமை தொகுக்கப்பட்ட தகவல்களின்படி இதுவரை கொரோனாவால் 6606 பேர் பலியாகி உள்ளனர். 167,511 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

 • March 17, 2020
 • 05:14 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

ஜெர்மனியில் மத ரீதியிலான நிகழ்வுகளுக்குத் தற்காலிகமாகத் தடை விதித்துள்ள அந்நாட்டின் சான்சிலர் ஏங்கெலா மெர்கல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணங்களை ரத்து செய்யுமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

 • March 17, 2020
 • 05:14 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

பிரிட்டனில் கட்டாய தடைகள் எதனையும் பிரதமர் போரீஸ் ஜான்சன் அறிவிக்காத போதும், மதுபான கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்ப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.

 • March 17, 2020
 • 05:13 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

''கண்களைக் கட்டிக்கொண்டு நீங்கள் தீயினை அணைக்க முடியாது. எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று முழுவதுமாக அறியாமல் இந்த தொற்று பரவலை நாம் முடிவுக்குக் கொண்டு வர முடியாது'' என்று ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் தெரிவித்துள்ளார்.

 • March 17, 2020
 • 05:11 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

 • March 17, 2020
 • 05:09 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கோவிட் -19 கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான சமீபத்திய நடவடிக்கையாக, கனேடிய குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் அல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

 • March 17, 2020
 • 05:09 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

ஐரோப்பா கொரோனா வைரஸ் வெடிப்பின் 'மையமாக' மாறி வருவதால், உலகநாடுகள் விரைந்து தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

 • March 17, 2020
 • 03:47 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

 • March 17, 2020
 • 03:46 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

ஈரான் முழுவதும் கொரோனா பரவிவிட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

 • March 17, 2020
 • 03:44 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரசுக்கும், சாதாரண ஜலதோஷத்திற்கும் வித்தியாசம் கண்டறிவது எப்படி? மேலும் தெரிந்து கொள்ள

 • March 17, 2020
 • 03:43 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாட்டின் அனைத்து மழலையர் பள்ளி, உயர்நிலை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதாக டென்மார்க் பிரதமர் அறிவித்துள்ளார்.

 • March 17, 2020
 • 03:41 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இத்தாலியின் Lombardy நகரில் முதன்முறையாக பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி கொரோனா நுழைந்தது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஜேர்மனி மூலமே தங்கள் நாட்டுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என குற்றம்சாட்டியுள்ளது.

 • March 17, 2020
 • 03:39 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்


 • March 17, 2020
 • 03:36 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் முடிவடையும் அல்லது கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்ப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையக் குழுவின் தலைவர் டாக்டர் ஜாங் நன்ஷான் கூறியுள்ளார்.

2003 ஆம் ஆண்டில் SARS வெடிப்பை எதிர்த்துப் போராடுவதில் உதவியதற்காக புகழ்பெற்ற 83 வயதான தொற்றுநோயியல் நிபுணர் ஜாங் நன்ஷான் என்பது குறிப்பிடத்தக்கது.

 • March 17, 2020
 • 03:33 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமான வேன் தீன்ஷிங் மற்றும் அவர் மனைவி மருத்துவமனை ஊழியர்களால் அனுப்பி வைக்கப்படும் காட்சிகள்

 • March 17, 2020
 • 03:31 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

அமெரிக்கா மற்றும் கனடாவில் பரவும் கொரோனா வைரஸ்.. மேலதிக தகவல்களுக்கு

 • March 17, 2020
 • 03:29 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்த மருத்துவரான லி வென்லியாங் காலமானார்.

 • March 17, 2020
 • 03:26 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் குறித்து Dean Koontz என்பவர் 1981-ஆம் ஆண்டு எழுதிய நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்திற்கு The Eyes of Darkness என்று பெயர், அதில், சீனா இராணுவ ஆய்வகத்தில், போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படும் புதிய வைரஸ் ஒன்று உருவாக்குகிறது.

இந்த ஆய்வாக சீனாவில் வுஹானில் ஒரு முரண்பாடாக(தெரியாமல்) வைக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸிற்கு வுஹான் 400 என்று அழைக்கப்படுகிறது.

இது ஒரு சரியான ஆயுதம், ஏனெனில் இது மனிதர்களை மட்டுமே பாதிக்கும், இது மனித உடலுக்கு வெளியே ஒரு நிமிடத்திற்கும் மேலாக உயிர்வாழ முடியாது.

இது ஒவ்வொருவர் வழியாக பரவக் கூடியது என்று குறிப்பிட்டுள்ளது. இது ஒரு கற்பனையான நாவலை கொண்டு எழுதப்பட்டதாக கூறப்பட்டாலும், தற்போது இதில் குறிப்பிட்டது போன்றே நடப்பது ஆச்சரியமாக உள்ளது.

 • March 17, 2020
 • 03:24 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

 • March 17, 2020
 • 03:23 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

வேப்பிலை, துளசி, நிலவேம்பு, தூதுவளை, பப்பாளி இலை, சஞ்சீவி வேர் மற்றும் வெட்டிவேர் போன்ற 11 வகை மூலிகைகளை ஒருநாள் முழுக்க வெயிலில் காய வைத்து அதை மறுநாள், அதை நீரில் கொதிக்கவைத்து, இறக்கி வடிகட்டி சேகரித்தேன்.

கொரோனாவுக்கான மருந்து தயாரானது. இந்த மூலிகைச் சாற்றை சாப்பிட்டால், வெள்ளையணுக்கள் அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, நோய் பரவலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்தும் என தமிழக மாணவன் இசக்கிராஜ் பேட்டியளித்துள்ளார்.

 • March 17, 2020
 • 03:21 PM
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸ் பாம்புகளிடமிருந்து வந்திருக்கலாம் என முதலில் கூறப்பட்ட நிலையில் புதிய திருப்பமாக வௌவாலிடமிருந்து தான் முதலில் பரவியிருக்கும் என சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு

Load More

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்