விஜய் படத்தின் கதை களம் கொண்ட கொரியத் திடைப்படத்திற்கு 4ஆஸ்கார் விருதுகள்! வரலாற்று சாதனை

Report Print Abisha in உலகம்
110Shares

92வது ஆஸ்கார் விருது விழாவில் வரலாறு படைத்திருக்கிறது Parasiteஎன்கிற கொரிய படம்.

92வது ஆஸ்கர் விருது விழாவில், Parasite என்ற கொரிய திரைப்படம் 4 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைபடம் என்று விருதுகள் வாங்கி வரலாறு படைத்துள்ளது.

மொத்தம் 6பிரிவுகளில் போட்டியிட்ட Parasite நான்கு பிரிவுகளில் பரிசு வென்றுள்ளது. இதில், சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் அயல்மொழி திரைப்படமான Parasite வெற்றி பெற்றது சாதனையாக கருதப்படுகின்றது.

இது விஜய் நடித்த மின்சாரக்கண்ணா என்ற திரைப்ப கதை பின்னணியை கொண்டது என்று சில நாட்களாக சமூகவலைதளங்களில் செய்தி வெளியாகி வந்தது. ஆனால், அதன் உன்மையான கதை முழுவதும் அது அல்ல.

இந்த கதையில், எது நடந்தாலும் கவலையில்லை என்ற மனநிலையைக் கொண்டு ஏழைக் குடும்பத்துக்கும், எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்யும் பெரும் பண்காரக் குடும்பத்துக்கும் உள்ள முரண்பாட்டை சித்தரிக்கும் திரைப்படம் “Parasite'.

தென்கொரிய இயக்குநர் போங்-ஜுன்-ஹோவின் மற்றுமொரு வியக்கத்தக்க படைக்கு இது. பணம் ஒரு மனிதனின் நடத்தையையும் எண்ணத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாக இருக்கிறது என்பதை அரசியல் பின்புலத்துடன் கூற முற்படுகிறது Parasite.

கழிவறை, சமையற்கூடம் என தனித்தனியாக எதுமில்லாத கைவிடப்பட்ட அடித்தள வீட்டில் வசிக்கிறது கிம் குடும்பம். இருபது இருபத்தைந்து வயதுக்குள் ஆணும் பெண்ணுமாக இருபிள்ளைகள்.

பணத்திற்கு திண்டாடிக் கொண்டிருக்கும் போது, பெரும் பணக்காரரான பார்க் குடும்பத்தின் அறிமுகம் கிடைக்கிறது. போலி சான்றிதழ் தாயரித்து அந்த வீட்டில் வேலைக்கு சேரும் கிம் மகன், பர்க்கையும் மனைவியையும் ஏமாற்றி தனது குடும்பத்தில் உள்ளவர்களை அந்த வீட்டில் வேலைக்கு சேர்கிறான்.

இவர்கள் அனைவரும் இணைந்து ஏற்கனவே அங்கு வேலை செய்தவர்களை தந்திரமாக வெளியேற்றுகிறார்கள். அதன்பின், கிம் குடும்பத்திற்கும் பார்க் குடும்பத்திற்கும் உள்ள நெருக்கம், முரண்பாடு உள்ளிட்டவையை நகைச்சுவையாக காட்சிகளாகத் அமைத்துள்ளார் போங்ஜுன்-ஹோ.

ஒரு ஏழை ஏன் பண்காரர் மீது வெறுப்பு கொள்கிறார்...? பணகாரர்கள் ஏன் வேலைக்காரர் என்றொரு பிரிவு இருக்க வேண்டும் என்று விருபுகிறார்கள் என்ற அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது.

அதற்காக அந்த கேள்விக்கு விடை கூற முயற்சிக்காமல், அறிவுரையும் கூறாமல் கேள்வியை மட்டும் விளக்கிவிட்டு காட்சிகள் நகர்கிறது.

இந்த படத்தில், வடகொரிய அதிபரையும் அரசியலையும் அங்காங்கே கேலி செய்யும் விதமாக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

படமுழுக்க குறியீடு மூலம் பலவற்றை சுட்டி காட்டப்பட்டுள்ளது. அதேபோல், பூமியில் உள்ள ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை அழுத்தம் திருத்தமாக விவரித்துள்ளது.

இந்த படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த மின்சாரக்கண்ணா திரைப்படத்தை தழுவியது என்று பலர் குறிப்பிட்டாலும், உண்மையில், வீட்டில் நுழைவது மட்டுமே ஒருபோன்ற சிந்தனை எனலாம். மற்றபடி இருபடங்களிலும் நோக்கம் வெவ்வேறானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்