2020 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,92,078 குழந்தைகள்! முதல் குழந்தை எங்கு பிறந்தது? யூனிசெஃப்

Report Print Abisha in உலகம்

உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தில் 3,92,078 குழந்தைகள் பிறந்துள்ளதாக யூனிசெஃப் செய்தி வெளியிட்டுள்ளது.

யூனிசெஃபின் தகவலின் படி பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் பிஜி தீவில்தான் 2020ஆம் ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளது. மொத்தம் 8 நாடுகளில் 1,98,722 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

அதில் அதிகபட்சம் இந்தியாவில் 67,385 குழந்தைகளும், சீனாவில் 46,299 குழந்தைகளும், நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும், அமெரிக்காவில் 10,452 குழந்தைகளும், காங்கோவில் 10,247 எத்தியோப்பியாவில் 8, 493 குழந்தைகளும் பிறந்துள்ளனர்.

இது குறித்து பேசிய யூனிசெஃப் தலைவர் “புதிய ஆண்டு புதிய சகாப்தத்தின் ஆரம்பம், நமது நம்பிக்கைகள் நமது எதிர்காலத்துக்கு மட்டுல்ல நமக்கு பின் வருபவர்களின் எதிர்காலத்தையும் பிரதிபலிக்கும் வாய்ப்பாகும். ஒவ்வொரு ஜனவரியிலும் காலண்டர் புரட்டும்போது, ஒவ்வொரு குழந்தையும் அவரது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவதற்கான அனைத்து சாத்தியங்களும் திறன்களும் நமக்கு நினைவூட்டப்படுகின்றன. அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்