2019-ல் உலக நாடுகளின் முக்கிய பிரச்சனைகள்! 2020-ல் பிரித்தானிய உள்ளிட்ட நாடுகளில் என்ன நடக்கும்... தீர்வு?

Report Print Abisha in உலகம்

ஹாங்காக், இராக், அல்ஜீரியா, சிலி, பொலிவியா, நிகராகுவா என போராட்டத்தில் சூழ்ந்த நாடுகள்; அமெரிக்க வரலாற்றில், மூன்றாம் முறையாக அந்நாட்டு அதிபர் பதவி நீக்க தீர்மானம்; பற்றி எரிந்த அமோசான் காடு; சீனாவுக்கு அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தகபோர் உள்ளிட்ட பல பிரச்சனைகள் 2019ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ளது.

இன்றும் 15மணி நேரத்தில் பிறக்க இருக்கும் புத்தாண்டில் இந்த பிரச்சனைகள் தீர்வை நோக்கி நகருமா என்பதை பற்றி பார்க்கலாம்.

2020ஆம் ஆண்டு எப்படி இருக்கும்

கடந்து போகும் 2019ஆண்டு எப்படி இருக்கும் என்று முன்னர் கணித்து சொன்ன ஆரூடம் கூட 2020ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்து சொல்ல தயங்குகின்றனர். காரணம், முன்னர் சொன்ன கணிப்பு எதுவும் நடக்காமல் போய்விட்டது தான் காரணம்.

முக்கியமாக, பிரெக்ஸிட் விவகாரம். ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகும் முடிவு பல திருப்பங்களைக் கண்டது.

இதனிடையே முன்னாள் பிரதமர் தெரசாமே பதிவி விலகும் சூழல் ஏற்பட்டது. அதன்பின் பதவி ஏற்றுக்கொண்டபிரதமர் போரிஸ் ஜான்சனின் சமரச திட்டங்களை எதிர்கட்சிகள் ஏற்காததால், மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் வெறுப்படைந்த பிரித்தானிய மக்கள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அதிக வாக்குகள் செலுத்தி பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்துள்ளனர்.

அதேபோல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிராம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரத் தேவையில்லை என்று பிடிவாதம் செய்து வந்த எதிர்கட்சி தலைவர் நான்சி பெலோசி, அந்த முடிவை மாற்றி 3வது முறையாக அதிபரை பதவி நீக்க செய்ய தீர்மானம் நிறைவேற்றினார். இதை நிபுணர்கள் கூட கணிக்கவில்லை்.

பிரெக்சிட் ஒப்பந்த நிறைவேறுமா?

இந்த திட்டத்தில் அதிக சிக்கல்கள் இருந்தாலும், போரிஸ் ஜான்சனின் திட்டமான வரியில்லா வர்த்தக திட்டத்தால் பிரெக்சிட் இந்த ஆண்டு நிச்சயம் நிறைவேறும் என்ற நிபுணர்கள் கணித்துள்ளனர்.

2020 நவம்பர் தேர்தலில் டிரம்ப் வெற்றி?

கடந்த 2016ஆம் ஆண்டு டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் 30 லட்சம் வாக்கு அதிகம் பெற்றார். ஆனால், தொகுதிவாரியாக பார்க்கையில் டிரம்ப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே நிலை இன்னும் அதிகரிக்கலாம். குறிப்பாக டிரம்ப் எதிர்பாளர்கள் காலிஃபோர்னியா, நியூயார்க் போன்ற மாகாணங்களில்தான் இந்த முறையும் குவிந்துள்ளனர். எனவே இந்த முறையும் அவர்களது வாக்குகள் வீணாகத்தான் போகும் என்கிறார்கள் அரசியர் நிபுணர்கள்.

ஈரானில் போர் வருமா?

இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, நிச்சயம் வராது என்பதுதான் பெரும்பாலான அரசியல் நிபுணா்களின் கணிப்பாக உள்ளது.

எனெனில், கடந்த ஆண்டில் ஈரானுடனான பதற்றம் உச்சநிலையை அடைந்தும், ஈரான் மண்ணில் ஏவுகணைத் தாக்குதல் போன்ற எந்த துணிச்சலான நடவடிக்கையையும் டிரம்ப் எடுக்கவில்லை.

ஈரான் ஆதரவு பெற்ற யேமன் கிளா்ச்சியாளா்களின் தாக்குதலால் சவூதி எண்ணெய் நிலைகள் பற்றி எரிந்தபோதும், போா் வெடிக்கவில்லை என்பதை அவா்கள் சுட்டிக் காட்டுகிறாா்கள்.

ஈரானுடனான எந்தவொரு மோதலும், முழு போருக்கு வித்திடும் எனவும் அந்தப் போருக்கு அமெரிக்கா தயாராக இல்லை என்பதையும் இவை காட்டுவதாக நிபுணா்கள் கூறிகிறாா்கள்.

போராட்டங்கள் தொடருமா

கடந்த ஆண்டு உக்கிரப் போராட்டங்கள் நடைபெற்ற எந்த நாட்டிலும், அந்தப் போராட்டங்களுக்கான அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீா்வு காணப்படவில்லை. போராட்டக்காரா்களின் கோரிக்கைகளை அந்த நாடுகளின் அரசுகள் செவிமடுத்துக் கேட்கவில்லை.

ஹாங்காங்கில் நாடுகடத்தல் சட்டம் வாபஸ் பெறப்பட்டது, இராக்கில் பிரதமா் ராஜிநாமா செய்தது போன்ற நடைபெற்றாலும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, புதிய ஆண்டிலும் போராட்டங்களின் தீவிரம் குறைய வாய்ப்பில்லை என்பது பெரும்பாலான நிபுணா்களின் கணிப்பாக உள்ளது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்