2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள்: இலங்கைக்கு எத்தனையாவது இடம்!

Report Print Balamanuvelan in உலகம்

2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள் பட்டியலில் இலங்கைக்கு 46ஆவது இடம் கிடைத்துள்ளது.

2019ஆம் ஆண்டின் தலைசிறந்த 50 கடற்கரைகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நாடு குரோவேஷியா.

குரோவேஷியாவின் Golden Horn Beach முதலிடத்தைப் பெற்றுள்ளதன் முக்கிய காரணம், இள நீல நிறத்திலிருந்து படிப்படியாக ஆழ்ந்த நீல நிறத்துக்கு செல்லும் தண்ணீர் மட்டுமல்ல, அடர்த்தியான பைன் நிறங்களும்தான்.

பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது அவுஸ்திரேலியாவின் Whitehaven Beach.

அங்கு சிலிக்கா காணப்படுவதால், தண்ணீர் வெப்பத்தைத் தக்கவைப்பதில்லை. அதனால் வெயில் கொளுத்தும் நாளிலும் வெறுங்காலுடன் நடை பயிலலாம். மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள கடற்கரை சைப்ரஸிலுள்ள Fig Tree Bay. கடற்கரையில் நிறைய மதுபான விடுதிகளும், வெயிலுக்கு இதமாக நிழல் தரும் குடைகளும் அங்கு பிரபலம்.

பட்டியலில் இலங்கைக்கு 46ஆவது இடம். இலங்கையின் தென் மேற்கு கரையில் அமைந்துள்ளது Tangalle Beach.

சமீப காலமாக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக மாறிவரும் இந்த கடற்கரை, பட்டியலில் 46ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

பட்டியலில் பிரித்தானியாவுக்கு 22 மற்றும் 40ஆவது இடங்கள் கிடைத்துள்ளன. Cornwallஇலுள்ள Pedn Vounder என்னும் கடற்கரையால் பிரித்தானியா இந்த பட்டியலில் 22ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இதுபோக ஸ்காட்லாந்திலுள்ள Monach Islands கடற்கரைக்கு 40ஆவது இடம் கிடைத்துள்ளதால் பிரித்தானியாவின் இரண்டு கடற்கரைகளுக்கு பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்