அழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய நிகழ்ச்சி தொகுப்பாளர்: அழகி செய்த செயல்!

Report Print Balamanuvelan in உலகம்
323Shares

பிரபஞ்ச அழகிப்போட்டியின்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் தவறான பெண்ணின் பெயரைக் கூற, பட்டத்துக்குரிய அழகி மேடையிலேயே அவருடைய தவறை சுட்டிக்காட்டினார்.

அட்லாண்டாவில் உள்ள அரங்கம் ஒன்றில் பிரபஞ்ச அழகிப்போட்டி நடந்தது.

அப்போது சிறந்த தேசிய உடையலங்கார அழகி யார் என்பதை அறிவித்தார் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஸ்டீவ் ஹார்வே.

சிறந்த தேசிய உடையலங்காரத்திற்கான பரிசை பெறுபவர் மிஸ். பிலிப்பைன்ஸ் என்று அவர் கூற, அவர் அருகில் நின்ற அழகி, ஸ்டீவ், உங்களிடம் ஒன்று சொல்லலாமா என கேட்டார்.

உடனே ஸ்டீவ் ஒலிபெருக்கியை அவரிடம் கொடுக்க, ஸ்டீவ் உண்மையில் சிறந்த உடையலங்கார அழகி மிஸ். பிலிப்பைன்ஸ் அல்ல, மிஸ். மலேசியா என்றார்.

அதிர்ந்து போன ஸ்டீவ், உடனே சுதாரித்துக்கொண்டு, எனக்கு எதிரே இருக்கும் திரையில் மிஸ். பிலிப்பைன்ஸ் என்றுதான் போட்டிருக்கிறார்கள் என்றார். ஸ்டீவ் அதிர்ந்து போனதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

2015இல் நடைபெற்ற அழகிப்போட்டியின்போது, வெற்றி பெற்றவர் மிஸ். பிலிப்பைன்ஸ் என்பதற்கு பதிலாக, மிஸ் கொலம்பியா என்று ஸ்டீவ் அறிவிக்க, மிஸ் கொலம்பியா வெற்றி பெற்றதாக எண்ணிக்கொண்டு பார்வையாளர்களை நோக்கி முத்தங்களை பறக்கவிட, பின்னர் தனது தவறை திருத்திக்கொண்டார் ஸ்டீவ்.

மீண்டும் ஒருமுறை செய்த தவறையே செய்ததால் அதிர்ந்த ஸ்டீவ், ஏன் மீண்டும் மீண்டும் இதையே செய்கிறீர்கள் என திரையில் பெயரை வெளியிட்டவரை கடிந்துகொண்டார்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்