196மீற்றர் நீளம் கொண்ட கப்பல் குறுகிய இடைவெளியில் தத்துரூபமாக கடந்த காட்சி... எங்கு தெரியுமா?

Report Print Abisha in உலகம்
119Shares

கிரீஸ் நாட்டில் குறுகிய இடைவெளி கொண்ட கால்வாயில் தத்துரூபமாக மாலுமி ஒருவர், கப்பலை செலுத்திய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கிரீஸின் கிழக்குப் பகுதியில், கால்கீஸ் நகருக்கு அருகே ஒரு குறுகிய ஜலசந்தி, ஈவீயா தீவை முக்கிய நிலப்பரப்பிலிருந்து பிரிக்கிறது. இதுவே எவ்ரிபோஸ் கால்வாய். இது எட்டு கிலோமீட்டர் நீளமும்,25மீற்றர் வரை வெவ்வேறு அளவுகளில் அகலமும் உடையது.

இந்த கால்வாய் வழியாக இங்கிலாந்தைச் சேர்ந்த எம் எஸ் ப்ரேமர் என்ற பயணிகள் கப்பல் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. 24 ஆயிரத்து 344 டன் எடை கொண்ட அந்தப் பிரமாண்ட கப்பல் 196 மீற்றர் நீளம் கொண்டுள்ளது.

இதற்கு முன் இதுபோன்றதொரு பெரிய கப்பல் இந்த கால்வாயை கடந்ததில்லை. சுமார் 24 மீற்றர் அகலம் கொண்ட பிரேமர் கப்பல் தத்துரூபமாக கடந்து சென்றது.

25 மீற்றர் அகலம் கொண்ட அந்தக் கால்வாயை 24 மீற்றர் அகலம் கொண்ட சொகுசுக் கப்பல் ஆடாமல், அசையாமல் மெதுவாகக் கடந்து சென்றது. அந்தக் கப்பல் சென்ற போது இருபுறமும் வெறும் 3 அடி இடைவெளி மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்