இரண்டு நாட்களுக்குள் 80 மில்லியன் மக்களை கொல்லும் தொற்று கிருமி! உலக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Report Print Raju Raju in உலகம்

pandemic எனப்படும் மர்மமான நோய்தொற்று கிருமி உலகளவில் பரவி 80 மில்லியன் மக்களை இரண்டு நாட்களுக்குள் உயிரிழக்க செய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற ஆபத்தான அச்சுறுத்தலை எதிர்கொள்ள உலகம் தயார் நிலையில் இல்லை என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே மருத்துவ விஞ்ஞானிகள் மர்மமான பிளேக்நோய் பரவுவதன் மூலம் மில்லியன் கணக்கிலான மக்கள் இறக்கலாம் என முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இந்த புதிய எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.

உலகமானது தற்போது pandemic நோய்தொற்றின் ஆபத்தின் பிடியில் இருப்பதாக The Global Preparedness Monitoring Board தெரிவித்துள்ளது.

pandemic என்ற அந்த நோய்த்தொற்று விரைவாகப் பரவுவதால், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கோ, அல்லது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்துக்கோ பரவி, பெரிய அளவில் உயிர் பலி வாங்கும் வல்லமை கொண்டதாக உள்ளது.

தற்போதைய சூழலில் உலகம் என்பது ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதால் இது போன்ற நுண்ணுயிரிகள் உலகளவில் 36 மணி நேரத்திலிருந்து 50 மணி நேரத்துக்குள் பரவும் என ஒரு அறிக்கை கூறுகிறது.

எபோலா, SARS போன்ற தொற்றுநோய்களால் பாதிக்கப்படும் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிலும் முக்கியமாக கடந்த 2014 - 2016 ஆண்டில் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலாவால் 10,000 பேர் இறந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது முக்கிய விடயமாகும்.

இது போன்ற நுண்ணுயிரிகள் நோய் தொற்றை பொறுத்தவரையில் ஏழ்மையான நாடுகளை அது முதலில் தாக்கும், ஏனெனில் அங்கு வாழும் மக்களுக்கு உடலில் போதுமான சத்து இருக்காது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானன் கூறுகையில், சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த அரசாங்கங்கள் அதிகளவு முதலீடு செய்ய வேண்டும்.

புதிய தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சிக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

1918 Spanish flu எனப்படும் தொற்றுப்பரவல் நோயால் ஏற்கனவே 50 மில்லியன் மக்கள் உயிரிழந்தார்கள் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிலும் இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோரின் வயது 65க்கு கீழ் தான் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நோய் தொற்று கிருமியானது உடலின் சொந்த நோயெதிர்ப்பு சக்தியை அதற்கு எதிராக செயல்படும் வீரியம் கொண்டதாக கருதப்படுகிறது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்