நடுவானில் விமானத்திற்குள்... தாக்குதல் என உயிர் பயத்தில் திக்கு முக்காடிய பயணிகள்: திகில் காட்சி

Report Print Basu in உலகம்
126Shares

ஸ்பெயினில் ஒரே விமானத்தில் பல கோளாறுகள் ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகளை திக்கு முக்காட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Vueling விமான நிறுவனத்திற்கு செந்தமான VY2118 பயணிகள் விமானம் மலகாவில் இருந்து பார்சிலோனா பயணித்துள்ளது. சம்பவம் குறித்து விமானத்தில் பயணித்த Javier Calderon கூறியதாவது, நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது திடீரென விமானத்திற்குள் புகை சூழ்ந்தது.

உடனே விமானக் குழுவினர் பயணிகளிடம் மூக்கை கைளால் முடிக்கொண்டு தலையை முடிந்த வரை கீழே குனிந்த படி இருக்க சொன்னார்கள். விமானம் தரையிறங்கும் நேரத்தில் அதிக அளவு புகை இருந்ததால் பல பயணிகள் தீவிரவாத தாக்குதல் என நினைத்து பீதியடைந்தனர்

எனினும், பார்சிலோனாவில் தரையிறங்கிய வேண்டிய விமானம் 20 நிமிடங்களுக்கு முன் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள El Prat விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து, பயணிகள் வெளியேற விமானத்தின் வெளியேறும் பாதை திறக்கப்பட்டது. அப்போது, முன் பகுதியில் இருந்த வெளியேறும் பாதை பலத்த காற்றில் பறந்தது, புகை சூழந்த விமானத்தில் சிக்கிய பயணிகள் சிலர் அதை பிடித்துக் கொள்ள பயணிகள் வெளியேறினர்.

விமானத்தில் பயணித்த இரண்டு ரயன் ஏர் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் பயணிகளை பத்திரமாக வெளியேற்ற உதவினர். மேலும், Vueling குழுவினருக்கு நிலைமை காட்டுக்குள் கொண்டு வர உதவி செய்தனர்.

எனினும், விமானத்தின் பின் பகுதியில் இருந்து வெளியேறும் பாதை வழியாகவும் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என பயணி Javier Calderon கூறினார்.

பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக விமானம் El Prat விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என Vueling விமானக் குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டள்ளது. விமானத்தில் ஏற்பட்ட புகை குறித்து அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்