பென் ஸ்டோக்ஸின் சகோதரர், சகோதரி சுட்டுக்கொலை... தாயின் காதலன் வெறிச்செயல்: 31 ஆண்டு ரகசியம்

Report Print Basu in உலகம்

இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் பென் ஸ்டோக்ஸின் சகோதரர் மற்றும் சகோதரி அம்மாவின் முன்னாள் காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் 31 ஆண்டுகளுக்கு பிறகு வெளி உலகிற்கு வந்துள்ளது.

இக்கொலை சம்பவம் பென் ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் 1988ம் ஆண்டு நியூசிலாந்தில் அரங்கேறியுள்ளது. அப்போது, பென் ஸ்டோக்ஸின் அம்மா Deborah, Richard Dunn என்ற நபருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

Deborah-Richard Dunn தம்பதிக்கு Tracey என்ற 8 வயது மகளும் Andrew என்ற நான்கு வயது மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் பிரிந்த நிலையில் Deborah ரக்பி பயிற்சியாளர் ஜெரார்ட் ஸ்டோக்ஸூடன் டேட்டிங் செய்துள்ளார்.

இதனால் எரிச்சலடைந்த Richard Dunn இரண்டு குழந்தைகளையும் சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இத்துயரத்தை தொடர்ந்து சில ஆண்டுகளாக Deborah-வுக்கு ஆதரவாக ஜெரார்ட் ஸ்டோக்ஸ் இருந்த நிலையில் இருவருக்கும் பென் ஸ்டோக்ஸ் பிறந்துள்ளார்.

(Image: Stephen Chambers)

பென் ஸ்டேக்ஸின் பிறப்பு Deborah தொடர்ந்து உயிர் வாழ அர்த்தமாக அமைந்துள்ளது. பின்னர், பென் ஸ்டோக்ஸிக்கு 12 வயது இருக்கும் போது அவர்கள் குடும்பமாக இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். பின்னர், பென் அங்கு தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் திங்கள்கிழமை செப்டம்பர் 16ம் திகதி Richard Dunn-ன் முன்னாள் மனைவிக்கு பிறந்த மகள் Jacqui Dunn, முதன் முறையாக தன் அப்பா செய்த கொலையை பொது வெளியில் கூறியுள்ளார்.

(Image: Getty Images)

49 வயதான Jacqui Dunn கூறியதாவது, கொலை நடக்கும் போது எனக்கு 18 வயது, தற்போதும் அந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீளவில்லை. தனது குழந்தைகளை மீண்டும் பார்க்க முடியாது என்பதை குறித்து அவர் யோசிக்கவே இல்லை, நிதானத்தை இழந்த அப்பா அவ்வாறு செய்துவிட்டார்.

இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்ட Deborah, கோபத்தில் அப்பாவின் சவப்பெட்டியை எட்டி உடைத்தார் என கூறியுள்ளார்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்