239 பேருடன் மாயமான மலேசியா விமானம் மர்மத்தில் இறுதியாக தீர்வு.. சாத்தியமான இருப்பிடம் கண்டுபிடிப்பு

Report Print Basu in உலகம்

2014ம் ஆண்டு 239 பேருடன் மலேசியா ஏர்லைன்ஸிக்கு சொந்தமான எம்.எச்.370 விமானத்தின் சாத்தியமான இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு புதிய தேடலை தொடங்கவுள்ளதாக புலனாய்வாளர் கூறியுள்ளார்.

மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடுவதில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு உதவிய விமான நிபுணர் Victor Iannello கூறியதாவது, எம்.எச்.370-ன் சரியான இடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, மேலும் புதிய தேடல் பணிக்கு இப்போது போதுமான ஆதாரங்கள் உள்ளன என கூறியுள்ளார்.

எம்.எச் .370 க்கான புதிய தேடல் பயணத்தின் இருப்பிடத்தை அவர் சுட்டிக்காட்டியதாக தெரிவித்துள்ளார். பல மாதங்களுக்கு முன்பு, ஒரு புதிய தேடல் திட்டத்தை உத்தியோகபூர்வ விசாரணையாளர்கள் எங்களிடம் கேட்டனர், அதை நாங்கள் செய்தோம்.

உத்தியோகபூர்வ விசாரணையாளர்கள் ஒரு புதிய தேடல் பகுதியை கண்டறியும் முயற்சியில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.

உத்தியோகபூர்வ விசாரணையாளர்கள், மலேசியாவிடம் புதிய தேடல் திட்டத்தை முன்வைத்ததா, மலேசியா புதிய தேடலுக்கான ஒப்பந்தத்தில் ஈடுபட உடன்படுகிறதா, மலேசியாவுடன் ஒப்பந்தம் இல்லாமல் தேடுவதை உத்தியோகபூர்வ விசாரணையாளர்கள் பரிசீலிக்குமா என்பது எனக்குத் தெரியாது.

நான் கணித்த விமானம் இருப்பிடம் அவுஸ்திரேலிய நகரமான பெர்த்திற்கு மேற்கே 620 மைல்களுக்கு மேல் இந்தியப் பெருங்கடலில் உள்ளது.

கதிரியக்க இயற்பியல், துல்லியமான விஞ்ஞான அளவுகோல்களைப் பயன்படுத்தி எனது அமைப்பு, எம்.எச்.370 இருக்கும் சாத்தியமான இடமாக 34.3°S 94°E கண்டறிந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின் நோக்கம் வெற்றிக்கு தேலையான வாய்ப்பைக் கொண்ட ஒரு புதிய தேடல் பகுதியை வரையறுப்பதாகும் என Victor Iannello குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்