எய்ட்ஸ் நோயை தடுக்க... எச்.ஐ.வி வைரஸை அழிக்ககூடிய சேர்மங்கள் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் புதிய மைல்கல்

Report Print Basu in உலகம்

உலகிலேயே கொடிய நோயான எய்ட்ஸ்-க்கு வழிவகுக்கும் எச்.ஐ.வி வைரஸை அழிக்ககூடிய சேர்மங்களை கண்டுபிடித்துள்ளதாக என சர்வதேச விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.

வைரஸைக் கொல்லக்கூடிய உடலில் உள்ள சேர்மங்களை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எச்.ஐ.விக்கு எதிரான போரில் இது ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.

பின்லாந்து, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வைரஸில் உள்ள மூலக்கூறுகளை உடைத்து இறுதியில் அதைக் அழிக்ககூடிய ஒரு சேர்மங்களைக் கண்டுபிடித்து இருப்பதாக கூறினர்.

விஞ்ஞானிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், எச்.ஐ.வி வைரஸிலிருந்து துத்தநாகத்தை அகற்றும் ஒரு சேர்மங்களை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர், அது வைரஸை பலவீனமானதாக ஆக்குகிறது என குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் Oleg Rakitinm விளக்கியதாவது, ஆரம்பத்தில் இருந்தே, இந்த மருந்து வகுப்பு புற்றுநோய் எதிர்ப்பு விளைவை ஏற்படுத்தும் என நாங்கள் முன்னுரிமையாக கருதினோம்.

ஆனால் திடீரென்று இந்தசேர்மங்கள் பூனை நோயெதிர்ப்பு குறைபாடுள்ள வைரஸுக்கு எதிராக சிறப்பான செயல்பாட்டைக் காட்டுகின்றன, இது மனித வைரஸுக்கு மிக நெருக்கமான உயிரினமாகும். உடலுறுப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் சேர்மங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.

அவர்களின் கண்டுபிடிப்புகள் முதன்மையானது என்றும், சேர்மங்கள் வேறு எந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடும் என்பதை ஆராயும் முயற்சியில் மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளதாக விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.

எச்.ஐ.வி வைரஸ் ஒரு தொற்றுநோயாகும், இது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் எய்ட்ஸ் நோய்க்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்