நாக பாம்புடன் விளையாடிய நபருக்கு நொடியில் நேர்ந்த மரணம்: திகில் கிளப்பும் வீடியோ

Report Print Basu in உலகம்

நாகத்துடன் விளையாடிய நபரை, பாம்பு ஒரே காடியில் கொன்ற சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

திகில் கிளப்பும் வீடியோவில், நபர் ஒருவர் நாக பாம்பை தனது தோளில் போட்டு விளையாடுகிறார். ஆனால், பாம்பு தரையை நோக்கி செல்கிறது.

நபரின் இடது காலைச் சுற்றிக்கொண்ட பாம்பின் தலைமை அவர் பிடிக்க முயல்கிறார். மறுபடியும், நாகத்தை தனது கையில் ஏற விடுகிறார். தோளில் மீது ஏறிய பாம்பு திடீரென அவரது கையில் கடிக்கிறது.

உடனே பாம்பை தரையில் வீசி ஏறியும் நபர், பாம்பு கடித்த இடத்தை பார்க்கிறார். இச்சம்பவம் அனைத்தையும் நபர் ஒருவர் தனது போனில் வீடியோவாக பதிவு செய்கிறார்.

இச்சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பாம்பு கடித்த காயம் அபாயகரமான விஷத்தால் ஊதா மற்றும் கருப்பு நிறமாக மாறி இருக்கிறது.

இச்சம்பவத்திற்கு பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்