இந்தியாவுக்கு திடீரென ஆதரவு அளித்த பாகிஸ்தான்: ஐ.நா-வில் நடந்த அதிசயம்

Report Print Basu in உலகம்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற இந்தியாவுக்கு, பாகிஸ்தான் உட்பட 55 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

சர்ச்சைக்குரிய சர்வதேச அரசியல் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அல்லாத இடத்துக்கான இந்தியாவின் வேட்புமனுவை ஆப்கானிஸ்தான், பூடான், இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலத் தீவு, மியான்மர், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, இலங்கை, வியட் நாம் உள்ளிட்ட 55 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அடுத்த இரண்டாண்டு காலம் அதாவது 2021 - 2022 வரை, பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அல்லாத 5 இடங்களுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு யூன் மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் பெரும்பாலான நாடுகள் இந்தியாவின் வேட்புமனுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதின் கூறும்போது, இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்