டிரம்ப்.. புதினை.. ஊதி தள்ளிய மோடி: உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவரானார்

Report Print Basu in உலகம்

உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலை லண்டனின் பிரபல இதழான பிரிட்டிஷ் ஹெரால்ட் வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார்.

லண்டனிலிருந்து வெளியாகி கொண்டிருக்கும் பிரபல இதழான பிரிட்டிஷ் ஹெரால்ட், உலகின் சக்தி வாய்ந்த தலைவர் யார்? என, தமது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. மொபைல் ஃபோன் மூலம் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தலைவர்களின் பெயர்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தன.

இவர்களில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

இவர்களில் இந்த ஆண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள் மற்றும் அரசியல்வாதியாக, 31 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விளாடிமிர் புடின் 29 சதவீதத்துடன் 2-ம் இடத்தையும், டிரம்ப் 21.9 சதவீதத்துடன் 3-வது இடத்தையும், சீன அதிபர் 18.1 சதவீதத்துடன் 4-வது இடத்தையும் பிடித்தனர்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்