யூடியூபால் பூமிக்கு இவ்வளவு ஆபத்தா... ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்

Report Print Basu in உலகம்

பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் கூகுளின் யூடியூப் தளத்தில் கூடுதலாக ஒரு அம்சத்தை சேர்த்தால் யூடியூபால் உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்சைடை ஆண்டிற்கு 5,00,000 டன் குறைக்கலாம் என கண்டறிந்துள்ளனர்.

உலகில் உள்ள இணைய பயனாளர்களால் தினந்தோறும் ஒரு பில்லியன் மணிநேரம் யூடியூபில் வீடியோ பார்க்கப்படுகிறது. எனவே யூடியூப் தளத்தால் ஏற்படும் மாசு தொடர்பாக பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நடத்தியது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் யூடியூபால் 10 மில்லியன் டன்னுக்கும் அதிகமான கார்பன் டை ஆக்சைடு உற்பத்தியாகிருப்பதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீட்டுள்ளனர்.

எனினும், யூடியூப் தளத்தில் கூடுதலாக ஒரு அம்சத்தை சேர்த்தால் இந்த கார்பன் தாக்கத்தை குறைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, உண்மையில், யூடியூபில் பல பயனாளர்கள் திரையில் ஓடும் காட்சிகளை பார்க்காமல் இசை மட்டுமே கேட்கின்றனர். இது தான் டிஜிட்டல் வேஸ்ட்.

செயலற்ற திரையில் ஒலி மட்டுமே ஒளிபரப்பாகும் அம்சத்தை யூடியூபில் சேர்த்தால் ஆண்டிற்கு 500,000 டன் கார்பன் டை ஆக்சைடு உற்பத்தியை குறைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்