அன்று தத்துக்கொடுக்கப்பட்டவர்! இன்று நாடு கடத்தப்பட்ட அவலம்- என்ன காரணம்? கதறும் இளைஞர்

Report Print Balamanuvelan in உலகம்
161Shares

சுமார் 20 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு இந்தியர் திடீரென நாடு கடத்தப்பட்ட நிலையில், தான் எதற்காக நாடு கடத்தப்பட்டோம் என்றே தெரியாமல் அடையாளம் எதுவும் இன்றி இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்.

பெற்றோர் திடீரென உயிரிழந்த நிலையில் ஒரு அமெரிக்க தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்ட வாஸுலு ஜேம்ஸ் என்ற ஸ்ரீனிவாசுலு அந்த இனவெறி கொண்ட பெற்றோரால் தங்கள் பண்ணையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்.

அங்கிருந்து ஓடி வந்த வாஸுலு பின்னர் மீண்டும் இன்னொரு தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட, அந்த தந்தையும் அவரை துஷ்பிரயோகம் செய்ய, அங்கிருந்தும் தப்பிய வாஸுலு இசை மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருகிறார்.

இசைக் கச்சேரிகள் நடத்தி ஓரளவு வசதியாக, கிரீன் கார்டு பெற்று வாழ்ந்து வரும் நிலையில், திடீரென ஒரு நாள் எந்த காரணமும் கூறாமல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

தான் எதற்காக நாடு கடத்தப்பட்டோம் என்பதே தெரியாமல் தனது கிரீன் கார்டு பாஸ்போர்ட் உட்பட அனைத்து ஆவணங்களும் பிடுங்கப்பட்ட நிலையில் இந்தியாவில் எந்த அடையாள அட்டையும் ஆவணங்களுமின்றி அன்றாடம் உழைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார் வாஸுலு.

அமெரிக்காவின் மாறிய தத்தெடுப்பு சட்டங்கள் காரணமா, அல்லது அமெரிக்க இரட்டை கோபுர குண்டு வெடிப்பின் காரணமாக அயல் நாட்டவர்களை வெளியேற்றுவதற்காகவா அல்லது சிறு திருட்டுகளுக்காக தண்டிக்கப்பட்டதற்காகவா, எதனால் தான் நாடு கடத்தப்பட்டோம் என்பது புரியாத வாஸுலு, அடையாளங்கள் இல்லாமல் இந்தியாவில் வாழ்வதை விட, எப்படியாவது என்னுடைய பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ள வேண்டும், நான் அமெரிக்காவுக்கு போவதையே விரும்புகிறேன் என்கிறார்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்