உலகளவில் புதிதாக பிறக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி: அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in உலகம்

உலகளாவிய ரீதியில் பெண்கள் கருத்தரிக்கும் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத் தன்மை உலகின் பாதி நாடுகளில் காணப்டுவதாகவும் இதன் காரணமாக அந்நாடுகளின் சனத்தொகையைப் பேணுவதற்குரிய போதியளவு குழந்தைகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் அவர்களது ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக இந்நாடுகளில் பேரக்குழந்தைகளின் எண்ணிக்கையை விட தாத்தா, பாட்டியினரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மேற்படி ஆய்வறிக்கையானது 1950 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வுகளின் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 1950 களில் பெண்கள் தமது வாழ்க்கைக் காலத்தில் சராசரியாக 4.7 பிள்ளைகளைப் பெற்றிருந்தனர்.

இந்த எண்ணிக்கையானது கடந்த வருடம் 2.4 பிள்ளைகளாகக் காணப்பட்டிருந்தது.

இது கிட்டத்தட்ட 1950 காலப்பகுதிகளில் காணப்பட்டதிலும் அரைமடங்கு.

இருப்பினும் பெண்கள் கரத்தரிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை வெவ்வேறு நாடுகளில் வேறுபட்டதாகவே காணப்படுகிறது.

உதாரணமாக, நைஜர், மேற்கு ஆபிரிக்காவில் இது 7.1 பிள்ளைகளாகவும், சைபிரஸ் பகுதியில் இது ஒரு தாய்க்கு ஒரு குழந்தை எனும் வீதத்திலும் காணப்படுகிறது.

லண்டனில் 1.7 ஆகவும், இதே நிலைமை மேற்கு ஜரோப்பிய நாடுகளிலும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இக்கருத்தரிப்பு வீதமானது 2.1 இலும் குறைவடையும் போது குறித்த குடித்தொகை சுருங்கும் அபாயநிலை தோன்றும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுன்றது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்