ஈரானின் தென்-மேற்கு நகரான அஹ்வாஸில் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இராணுவ அணிவகுப்பு இடம்பெற்ற பகுதியை அண்மித்த பகுதியிலுள்ள பூங்காவிலிருந்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இராணுவ சீருடையில் இருந்த துப்பாக்கிதாரிகளே இவ்வாறு கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளே காணப்படுவதாக சந்தேகிக்கப்படுவதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
1980-88 ஈராக் உடனான யுத்தத்தின் தொடக்கத்தை நினைவுறுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் இராணுவ வீரர்களை இணைத்து ஈரான் இராணுவ அணிவகுப்பை நடத்திவந்த நிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உறுதிபடுத்தப்படாத நிலையில், 20இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் உடனடி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.