உலக வெப்பநிலை அதிகரிப்பினால் ஏற்படப்போகும் புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in உலகம்

அதிகரிக்கும் ஒவ்வொரு பாகை வெப்பநிலைக்கும் உலகளவில் கோதுமை, அரிசி மற்றும் சோளம் மீதான பீடைத்தாக்கம் 10 - 25 வீதத்தினால் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

வெப்பநிலை அதிகரிப்பானது பூச்சிகளில் சக்தி தேவையினை அதிகரிக்கச்செய்து பீடைகளை மேலும் இரைகொள்ளத் தூண்டுகின்றன.

இந் நிலைப்பாடு வருங்காலங்களில் உலகின் தானியப் பயிர்கள் மீதான முக்கிய பிரச்சனையாக இருக்கப்போகின்றது என ஆய்வாளர் Curtis Deutsch கூறுகின்றார்.

தற்போதுள்ள காலநிலை மாற்றம் தணிக்கப்படாவிடின் இந் நூற்றாண்டின் இறுதியில் மேற்படி பீடைத் தாக்கம் 2 மடங்காக இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது.

Prof Deutsch, Joshua Tewksbury மற்றும் அவரது சகாக்களால் தானியப் பயிர்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்றிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers