சமூக வலைத்தளத்தில் டிரம்பை முந்தும் மோடி

Report Print Trinity in உலகம்
17Shares

சமூக வலைத்தளங்களில் அதிகமான நபர்கள் பின்தொடர்பவர்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, இந்திய பிரதமர் மோடி முந்தி சாதனை படைத்துள்ளார்.

ஜெனிவாவில் உள்ள புர்சன்- மார்ட்ஸ்டெல்லர் என்கிற இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உலக தலைவர்கள் பற்றிய ஆய்வொன்றை நடத்தினர்.

டுவிட்டரில் டிரம்பிற்கு அதிகமான எண்ணிக்கையில் பின்தொடர்பவர்கள் இருந்தாலும் (23.1 மில்லியன்) இந்திய பிரதமர் மோடிக்கு பேஸ்புக்கில் 43.2 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆசியாவில் டுவிட்டரை விடவும் பேஸ்புக் அதிக அளவு உபயோகத்தில் இருக்கிறது. அதிலும் முகநூலை அதிகம் உபயோகிக்கும் கம்போடியா நாட்டின் பிரதமர் ஹூன் சென் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில்தான் இருக்கிறார். இவரை 9.6 மில்லியன் மக்கள் மட்டுமே பின்தொடர்கிறார்கள்.

முகநூலில் டிரம்ப் கடந்த 14 மாதங்களில் 204.6 மில்லியன் கமெண்ட் மற்றும் லைக்குகள் பெற்றிருக்கிறார். தினமும் சராசரியாக 5 பதிவுகள் வரையில் பதிவிடுகிறார் டிரம்ப்.

இது மோடியின் பதிவை விட இரண்டு மடங்கு அதிகம் என்றாலும் மோடிதான் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்