அதிர்ஷ்டத்தில் கலக்கும் இந்தியர்கள்: துபாய் லாட்டரியில் 21 கோடி பரிசு!

Report Print Gokulan Gokulan in உலகம்

கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜான் வர்கீஸ் துபாயில் டிரைவராகப் பணிபுரிகிறார்.

இவருக்கு அபுதாபி லாட்டரியில் 1.2 கோடி திர்ஹாம் இந்திய மதிப்பில் 21கோடி பரிசாகக் கிடைத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அபுதாபி ஏர்போர்ட்டில் விற்கப்பட்ட லாட்டரி சீட்டுக்களில் ஒன்றை ஜான் வர்கீஸ் வாங்கியிருந்தார்.

அதற்கான குலுக்கல் சில நாட்களுக்கு முன்னாள் நடந்த நிலையில் ஜான் வர்கிஸ் வாங்கிய லாட்டரி சீட்டிற்குப் பரிசுத் தொகை கிடைத்து அவரை அதிர்ஷ்டக்காரர் என அழைக்க வைத்திருக்கிறது.

தனக்குப் பரிசுத் தொகை கிடைத்தது என்ற தகவலை நம்பாத ஜான் யாரோ தன்னை ஏப்ரல் முட்டாளாக்குவதற்காக இப்படி செய்திருப்பார்கள் என்று நினைத்து இந்த அழைப்பை அலட்சியப்படுத்தியுள்ளார். அவரது நண்பர்கள்தான் லாட்டரி சீட்டு நிறுவனத்திற்கு போன் செய்து கேட்டு செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை தன் நண்பர்கள் நால்வருடன் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார். இன்பத்திலும் தனது நண்பர்களுக்குப் பங்கு கொடுத்து அசத்தியுள்ளார் இவர்.

ஏழ்மையை வெல்ல அவர் உழைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தப் பணம் அவரது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் என்கிறார்.

மேலும் கடந்த காலத்தில் பணமில்லாமல் தான் மிகவும் துன்பப்பட்ட நேரங்களை மறக்காமல் அது போல் சிரமப்படுவோருக்கு உதவி செய்யப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இன்னமும் பட்டன் செல்போன் பயன்படுத்தி வரும் வர்கிஸ் இனிமேல்தான் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்கிறார்.

கடந்த ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இதே போன்று கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு 22 கோடி பரிசுத் தொகை விழுந்தது நினைவு கொள்ளத்தக்கது.

கடந்த அக்டோபர் 2017ல் இருந்து நடத்தப்பட்ட லாட்டரி சீட்டுக் குலுக்கல்களில் 10 லட்சம் திர்ஹாம் பரிசுத் தொகை விழுந்த 10 பேர்களில் 8 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்