உலக பணக்காரர்களின் வியக்கவைக்கும் விவாகரத்து இழப்பீட்டு தொகை

Report Print Athavan in உலகம்

கணவன், மனைவி தங்களின் திருமண வாழ்க்கை கசந்து விவாகரத்து செய்ய முற்பட்டால், சட்டவிதிகளின்படி கணவனை இனி அவரது மனைவி சார்ந்து வாழாமல் இருக்க அவர்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

அந்த வகையில், உலக அளவில் பெரும் பணக்காரர்களின் விவாகரத்தின் போது அவர்களின் மனைவிகளுக்கு அவர்கள் இழப்பீடாக கொடுத்த பெரும் தொகையின் அடிப்படையில் வரிசைபடுத்தப்பட்ட டாப் 10 விவாகரத்து செய்து கொண்ட தம்பதியர் பற்றி தெரிந்துகொள்வோம்.

Bernie and Slavica Ecclestone

Bernie Ecclestone உலக புகழ் பெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். 23 வருடங்களுக்கு முன்பு Slavica Ecclestone என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு Tamara Ecclestone மற்றும் Petra Ecclestone எனும் இரண்டு பெண்கள் உள்ளனர்.

2009 ஆண்டு விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்தனர், எனவே நீதிமன்ற வழிகாட்டுதல் படி தன் மனைவி Slavica Ecclestone க்கு Bernie Ecclestone $1.2 பில்லியன் டொலர் இழப்பீட்டு தொகையாக வழங்கினார்.

Rupert Murdoch and Anna Maria Torv

Rupert Murdoch அமெரிக்காவின் பிரபல தொலைகாட்சி நிறுவனங்களான Fox மற்றும் sky news T.V சாம்ராஜ்யத்தின் நிறுவனர் ஆவார்.

இவருக்கு Anna Maria Torv எனும் பெண்ணுடன் 31 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 3 வாரிசுகள் உள்ளனர், 1999 ம் வருடம் விவாகரத்துக்கு தாயரான இந்த தம்பதி இழப்பீட்டு தொகையாக $1.7 பில்லியன் டொலரை மனைவிக்கு வழங்கினார் Murdoch. விரைவிலேயே Wendi Deng எனும் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

Rupert Murdoch and Wendi Deng

மேலே பார்த்த அதே Rupert Murdoch தான் இவர். முதல் விவாகரத்துக்கு பின் 17 நாள்கள் கழித்து சீன வம்சாவளியை சேர்ந்த Wendi Deng என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

13 வருட திருமண வாழ்க்கைக்கு பின் மீண்டும் விவாகரத்து அஸ்திரத்தை கையில் எடுத்தார் Murdoch, ஆனால் இந்த முறை அவரது இரண்டாவது மனைவிக்கு அளித்த இழப்பீட்டு தொகை சுமார் $2 பில்லியன் டொலர் ஆகும்.

Alec and Jocelyn Wildenstein

Alec Wildenstein மற்றும் Jocelyn Wildenstein தம்பதியர் 1978 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர், Alec Wildenstein ரஷ்யாவை சேர்ந்த பெரும் தொழிலதிபர், அரியவகை கலைபொருட்கள் வியாபாரி மற்றும் உயர் ரக பந்தய குதிரைபண்ணை உரிமையாளரும் ஆவார்.

1997 முதல் 1999 காலகட்டத்தில் விவாகரத்து செய்து கொண்டனர். மனைவிக்கு இழப்பீடாக $2.5 பில்லியன் கொடுத்தது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் $100 மில்லியன் டொலர் உதவி தொகையும் கொடுத்துவந்தார்.

Vladimir Potanin and Natalia Potanina

உலக அளவில் வரலாற்றில் என்றும் இடம்பிடிக்கும் விவாகரத்து ஜோடி இவர்களாக தான் இருக்க முடியும். ரஷ்யாவின் முன்னனி தொழிலதிபரான Vladimir Potanin அவரது மனைவி Natalia Potanina-க்கு விவாகரத்து இழப்பீடாக சுமார் $14 பில்லியன் டொலர் என்ற இமாலய தொகையை வழங்கினார்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers