உலக அளவில் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்த கௌரவம்

Report Print Fathima Fathima in உலகம்

குழந்தைகளுக்கான ஐ.நா முகமையின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான உணவு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்.

உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களுக்காக இயங்கும் இந்நிதியத்தின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குவான்டிக்கோ’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டதை எண்ணி பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், யூனிசெப் அமைப்புடன் இணைந்து செயல்படும் நான் கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பல கிராமங்களுக்கு சென்றுள்ளேன்,

அப்போது ஏராளமான இளம்பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து கலந்துரையாடி இருக்கிறேன்.

சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கி தருவதன் மூலம் அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments