சீனாவை சீண்டும் ட்ரம்ப்! அதிகார மோதல் வெடிக்குமா..?

Report Print Vethu Vethu in உலகம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

அண்மையில் சீனாவை சீண்டும் வகையில், தாய்வான் ஜனாதிபதியுடன் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக பேசியிருந்தார்.

தொலைபேசி மூலம் தன்னை தொடர்புகொண்ட தாய்வான் ஜனாதிபதி ட்ஸாய் இங்-வென் தனது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அப்போது அமெரிக்கா-தாய்வானுக்கு இடையில் நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்தவாரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஒரே சீனா’ என்பதுதான் அமெரிக்கா-சீனா இடையிலான அரசியல் உறவுகளின் பிரதானமாக உள்ளது.

தாய்வான் விவகாரத்தை கவனத்துடன் கையாள்வதுடன், இந்த உறவுகளை சீர்குலைக்கும் வகையில் ஏற்படக்கூடிய தேவையற்ற இடையூறுகளை விலக்கி, இருதரப்பும் ஒரே சீனா என்ற கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சீனாவின் நிலைப்பாடு குறித்து நேற்று பேட்டியளித்த டிரம்ப், ஒன்றுபட்ட சீனா என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என சீனா உத்தரவிட கூடாது என்று கூறியுள்ளார்.

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வடகொரியாவுக்கு பக்கத்து நாடான சீனா அமெரிக்காவுக்கு எதுவுமே செய்ததில்லை. ஒரே சீனா என்ற அந்நாட்டு அரசின் கொள்கை எனக்கு புரிகிறது.

ஆனால், அந்நாட்டுடன் நாம் வர்த்தகம் உள்ளிட்ட எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளாத நிலையில் நான் யாருடன் பேச வேண்டும் என்று அமெரிக்காவுக்கு சீனா உத்தரவிட கூடாது.

தாய்வான் ஜனாதிபதியை நான் தொலைபேசியில் அழைத்து பேசவில்லை. அவராகவே எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். அது, மிக சிறிய உரையாடல்தான். அவரது அழைப்பை ஏற்று பேசியிருக்க கூடாது என்று இன்னொரு நாடு (சீனா) எனக்கு எப்படி அறிவுறுத்த முடியும்?

தாய்வான் ஜனாதிபதியின் அழைப்பை நான் ஏற்காமல் போயிருந்தால், அது, அவரை அவமதித்ததாக அமைந்திருக்கும் அல்லவா? என அந்த பேட்டியில் டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments