சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதல் - 16 பேர் பலி

Report Print Gokulan Gokulan in உலகம்

ஆபிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா இயக்கத்தின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறித்த அமைப்பு அந்நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாகவும் இருந்து வருகின்றது.

இந்த நிலையில், அங்குள்ள துறைமுகத்தின் வெளியே மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட பாரிய லொறி ஒன்று வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு படையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் 16 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு அல் ஷபாப் அமைப்பு உடனடியாக பொறுப்பேற்ற அதேவேளை “அப்பாவி மக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments