யப்பானின் மேலாக தோன்றிய அற்புத முகில்!

Report Print Givitharan Givitharan in உலகம்

தற்போது யப்பானின் Fujisawa நகர்ப்புறத்தின் மேலாகத் தோன்றிய விசித்திரமான, கோள வடிவான முகிலின் புகைப்படங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

புகைப்படவியளாளர் தெருவிக்கும் கருத்தின் படி, மேற்படி முகில் அது புகைப்பிடிக்கப்பட்ட நேரத்திலிருந்து அதன் வடிவத்தை இழக்க ஆரம்பித்து, பின் சடுதியாக வானில் மறைந்திருக்கிறது.

இது தொடர்பாக அவர் மேலும், தான் தனது காரின் வெளிப்புறமாக பார்த்தபோது கோளப்பந்து வடிவான முகிலைப் பார்க்க முடிந்ததாகவும், பின்னர் விரைந்து அதனைப் படம்பிடிக்க முயன்றதாகவும் சொல்கிறார்.

ஆனால் அதன் கோளத்தன்மையை படம்பிட்க்காமல் போனமைக்காக அவர் வருந்துவதாகவும் சொல்கிறார்.

இச்சம்பவம் கடந்த ஞாயிறு மதியமளவில் இடம்பெற்றிருக்கின்றது. ஆனாலும் இதுபோன்ற பஞ்சு முகில்கள் இனங்காணப்பட்டமை இதுவே முதல் தடவையல்ல.

இது போன்ற நிகழ்வொன்று 2015 இலும் படம்பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments