அணுகுண்டு ஆபத்திற்கு எவ்வளவு அருகில் நீங்கள் இருக்கின்றீர்கள்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Report Print Givitharan Givitharan in உலகம்

உலகளாவிய ரீதியில் இன்று பல்வேறு நாடுகளிலும் அணுகுண்டு அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

பல நாடுகளில் அணுகுண்டுகள் காணப்படாத போதிலும் அருகிலுள்ள நாடுகளால் இந்த அச்சுறுத்தல் தொடர்கின்றது.

இவ்வாறு உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடி சுமார் 15,600 அணுகுண்டுகள் அல்லது அணு ஆயுதங்கள் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அணு ஆயுதங்கள் எந்தெந்த நாட்டில் காணப்படுகின்றது என்பது தொடர்பான வரைபடம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ரஷ்யா, இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

எனினும் ரஷ்யாவிலேயே அதிகளவில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளன.

ஏறத்தாழ 7,300 அணு ஆயுதங்கள் இவ்வாறு சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகில் உள்ள ஒட்டுமொத்த அணு ஆயுதங்களில் 51 சதவீதமானவற்றினை ரஷ்யாவும், அமெரிக்காவும் கொண்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments