நவம்பர்- 24: உலக வரலாற்றில் மறக்கக் கூடாத நாள்

Report Print Peterson Peterson in உலகம்

உலகம் தோன்றியது முதல் தற்போதைய நாகரீக காலம் வரை நமது வரலாற்றில் மறக்கக் கூடாது நாள்களில் ஒன்று நவம்பர் 24.

உலகில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விளக்கத்தை அளித்து வருகின்றன.

ஆனால், அறிவியல் ரீதியாக பரிணாம வளர்ச்சியில் தான் படிப்படியாக உயினங்கள் பூமியில் உண்டாயின என்பதை உலக அறிஞர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த சூரிய மண்டலமே சூரியன் உள்பட எதுவும் இல்லாமல் வெற்றிடமாக இருந்தபோது சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அண்டத்தில் ஒரு பெருவெடிப்பு(Big Bang) ஏற்பட்டது.

இந்த பெருவெடிப்பில் உருவான வாயுக்கள் அண்டத்தில் பல ஆயிரம் ஆண்டுகள் சுற்றி வந்துள்ளன. பின்னர், இவற்றில் ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட வாயுக்கள் ஒன்றிணைந்து ஒரு பிரமாண்டமான நெருப்புக்கோளம் உருவானது.

இந்த நெருப்புக்கோளம் தான் பின்னாளில் சூரியனாக உருவெடுத்தது. சற்று சிந்தித்துப்பாருங்கள், சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னார் உருவான சூரியன் இன்றளவும் வானில் பிரகாசமாக ஜொளித்துக்கொண்டு இருக்கிறது.

உலகளவில் மிக மிக பழமையான பொருள் எது என்றால், அதற்கு ‘சூரியன்’ என நாம் பதில் சொல்வதில் தவறில்லை.

சூரியன் உருவாகி சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 450 ஆண்டுகளுக்கு முன்னர், சூரியனில் ஒரு மாற்றம் ஏற்பட்டு வெடித்துச் சிதறியுள்ளது.

இவ்வாறு சூரியன் வெடித்தபோது அதிலிருந்து சிதறிய துகள்களில் ஒன்று தான் நாம் வசிக்கும் இந்த பூமியாகும்.

சூரியனை விட்டு வெகு தொலைவில் எரியப்பட்ட பூமி சுமார் 50 கோடி ஆண்டுகளாக ஒரு பாறையாக சுழன்று வந்துள்ளது.

பின்னர், சில கோடி ஆண்டுகளுக்கு பின்னர், பூமியின் மேல் பரப்பு குளிர்ந்தது. இந்த குளிர்ச்சியானது காலப்போக்கில் மேகங்களை உருவாக்கியது. இதன் அடுத்தக்கட்டமாக பெருமழை பூமியில் பெய்தபோது தான் கடல்களும், ஆறுகளும், ஏரிகளும் பூமியில் உண்டாயின.

அதாவது, பாறையாக இருந்த பூமியில் மழை வருவதற்கு சுமார் 10 கோடி ஆண்டுகள் செலவிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர், சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் முதன் முதலாக ஒரு செல் உயிரினம் தோன்றியது. இந்த உயிரினம் படிப்படியாக பரிணாமம்(உருவ மாற்றம்) அடைந்து பல்வேறு உயிரினங்களாக மாறியது.

இவ்வாறு படிப்படியாக பரிணாமம் அடைந்து பல நூறு கோடி விலங்குகளின் வாழ்க்கைக்கு பிறகு, சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் பிறந்ததாக அறிவியல் வரலாறு கூறுகிறது.

பாலூட்டி இனத்தை சேர்ந்த குரங்குகள் தான் சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு பின்னர் மனிதர்களாக உருமாறியுள்ளான். அதாவது, குரங்கில் இருந்து மனிதன் உருவாக சுமார் 7 கோடி ஆண்டுகள் ஆகியுள்ளன.

இவ்வாறு, பரிணாம வளர்ச்சியின் மூலம் தான் உலகில் உயிரினங்கள் தோன்றின. இந்த உயிரினத்தில் இருந்து தான் காலப்போக்கில் மனிதன் தோன்றினான் என்ற உண்மையை சார்லஸ் டார்வின் என்ற அறிவியல் மேதை உலகிற்கு உணர்த்திய நாள் தான் நவம்பர் 24, 1859.

பரிணாமக் கொள்கையின் தந்தை எனப்படும் டார்வின் இந்த உண்மையை 'On the Origin of Species'(உயிரனங்கள் தோன்றிய வரலாறு) என்ற புத்தகத்தின் மூலம் இன்றைய நாளில் தான் உலக மக்களுக்கு அறிவித்தார்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments