சர்வதேச அளவில் இந்தியாவிற்கு இப்படி ஒரு அவப்பெயரா?

Report Print Peterson Peterson in உலகம்

சர்வதேச நாடுகளை ஒப்பிடுகையில் கழிவறை வசதிகள் இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் நேற்று நவம்பர் 19-ம் திகதி ஆண்கள் தினம் கொண்டாடினாலும், இதே தினத்தில் தான் சர்வதேச கழிவறை தினமும் அனுசரிக்கப்படுகிறது.

சுகாதாரத்தை முன்னிலைப்படுத்தி கழிவறை வசதிகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த துப்புரவு தொண்டு நிறுவனமான WaterAid என்ற அமைப்பு அண்மையில் எடுத்த ஆய்வில், சர்வதேச அளவில் அடிப்படை வசதியான கழிப்பறைகள் இன்றி பொதுமக்கள் வேதனைப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் நகர் புறங்களில் வசிக்கும் 5-ல் ஒருவர் கழிப்பறை வசதி இல்லாமல் வசித்து வருகின்றனர். அதாவது, உலகம் முழுவதும் 700 மில்லியன் மக்கள் கழிப்பறை வசதிகள் இல்லாமல் வசித்து வருகின்றனர்.

இந்தியாவை ஒப்பிடுகையில், சுமார் 157 மில்லியன் மக்கள் கழிப்பறை வசதிகள் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

தொண்டு நிறுவனம் எடுத்த ஆய்வில் 8 ஒலிம்பிக் விளையாட்டு திடல் பரப்பரளவு உள்ள அளவிற்கு கழிவுகள் தினமும் சுத்தப்படுத்தப்படுகின்றன.

அதாவது, நாடு முழுவதும் சுமார் 41 மில்லியன் மக்கள் வெட்ட வெளியிலேயே இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் சீனா மற்றும் அடுத்தடுத்த இடங்களில் நைஜீரியா, இந்தோனேஷியா, ரஷ்யா, பங்களாதேஷ், காங்கோ ஜனநாயக குடியரசு, பிரேசில், எத்தியோபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கழிப்பறை வசதிகள் இல்லாத முதல் 10 இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments