நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்ட கட்டிடங்கள்! டாப் 10 இதுதான்

Report Print Raju Raju in உலகம்

சென்னை‌யை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடிக் கட்டடங்களில் ஒன்று அப்போது பெய்த மழையல் இடிந்து தரைமட்டமாகியது.

இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் 61 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

இதன் அருகில் இருந்த மற்றொரு 11 மாடிக் கட்டடமும் ஆபத்தான முறையில் இருப்பது தெரியவந்ததால், அதனை இடிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டதை இடிக்கப்பட்டுள்ளது. இது போல பிரச்சனையால் உலகளவில் இதுவரை இடிக்கப்பட்ட கட்டடங்கள் விவரம் வருமாறு:

ராயல் கான்பெர்ரா மருத்துவமனை - அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா நாட்டில் கடந்த 1997 ஆம் ஆண்டு பெரிய பேரிடர் ஏற்பட்டது. இதில் ராயல் கான்பெர்ரா மருத்துவமனை கட்டிடம் பாதி இடிந்தது. இதை முழுவதும் இடிக்க அரசு ஆணையிட்டதால் அது அப்போது இடிக்கப்பட்டது.

ஜே.எல் ஹட்சன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் - மெக்சிகன்

கட்டிடத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இம்ப்லோஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகர்க்கப்பட்டது. இந்த தொழில்முறையை பயன்படுத்தி இடிக்கப்பட்ட பெரிய கட்டிடம் இதுவாகும்.

ஓசன் டவர் - அமெரிக்கா

அரசு விதிமுறைகளை மீறி கட்டபப்ட்டதாக இந்த ஓசன் டவர் முழுவதும் கட்டி முடிப்பதற்கு முன்னதாகவே கடந்த 2008 ஆண்டு இடித்து தள்ளப்பட்டது.

ஏத்லோன் மின் நிலையம் - தென் ஆப்ரிக்கா

இம்ப்லோஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பு பணிகள் காரணமாக அந்த மின் நிலையத்தில் இருந்த இரண்டு டவர்கள் கடந்த 2010 ஆண்டு இடிக்கப்பட்டது.

லேண்ட் மார்க் கட்டிடம் - அமெரிக்கா

420 அடி உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடம் 1957ல் கட்டப்பட்டது. பின்னர் பராமரிப்பு பிரச்சனை காரணமாக 2006ல் இடித்து தள்ளப்பட்டது.

பொலீஸ் ஸ்டேஷன் - நியூசிலாந்து

நியூசிலாந்தில் உள்ள மிக பெரிய நகரமான கிரைஸ்ட்சர்ச்சில் இருந்த 160 அடி உயரம் கொண்ட 15 மாடி கட்டிடம் 2011ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்ததையடுத்து 2012 ல் வெடி மருந்து மூலம் தகர்க்கப்பட்டது.

ஸ்டல்கோ இரும்பு ஆலை - கனடா

இந்த மிக பெரிய ஆலையானது 1997 ஆம் வருடம் இடிக்கப்பட்டது.

வெடிலன்ஸ் பல்நோக்கு மைதானம் - அமெரிக்கா

மிகபெரிய கால்பந்து மைதானமான இதில் ஒரே நேரத்தில் 65 ஆயிரம் பேர் உட்காரலாம். 1971ஆம் ஆண்டில் கட்டபட்ட இந்த மைதானம் பழமை காரணமாக 64 வினாடிகளில் கடந்த 2004ஆம் ஆண்டு தகர்க்கப்பட்டது.

ஜேம்ஸ் டவுன் பாலம் - ரோட்ஸ் தீவு

ரோட்ஸ் தீவில் உள்ள ஜேம்ஸ் டவுன் பாலம் 1940ல் கட்டப்பட்டது. 6, 892 அடி நீளம் கொண்ட இந்தப் பாலம் வலுவிழந்ததால், 2006ல் தகர்க்கப்பட்டது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments