இன்று ஆவிகளை விரட்டியடிக்கும் திருவிழா! ஹாலோவின் கொண்டாட்டம்

Report Print Fathima Fathima in உலகம்

ஹாலோவின் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும்.

இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள் சம்ஹைன் எனக் கொண்டாடப்படும் கெல்ட்டியத் திருவிழாவிலும் மற்றும் கிருஸ்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது.

இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.

GETTY IMAGES
எப்படி தோன்றியது?

இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான இடைவெளி இந்நாளில் மெலிந்து போவதாய் பழைய செல்ட் இனத்தவர் நம்பினர்.

அன்றைய நாளில் தங்களது முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர்.

தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.

இந்த கொண்டாட்டத்தில் ஒரு சிறிய தீயை எழுப்பி அவற்றுள் அகற்றப்பட வேண்டிய பொருட்கள் இடப்படுகின்றன.

பல்வேறு வகையான ஆடைகளும் மூகமூடிகளும் கெட்ட ஆவிகள் செய்வதைப் போல கிழிக்கப்படுகின்றன அல்லது கெட்ட ஆவிகளை சமாதானப்படுத்த அவ்வாறு செய்யப்படுகிறது.

ஆடை அலங்காரங்கள்

இந்த நாளின் போது சிறுவர், சிறுமியர்கள் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர்.

வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

அவர்கள் பேய்கள், சூனியக்காரிகள், பிசாசுகள் அல்லது நவீன உலகத்துக்கு ஏற்றவாறு மாறு வேடம் அணிந்து செல்வார்கள்.

EVERETT COLLECTION / REX FEATURES

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments