இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Report Print Maru Maru in உலகம்

இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் புகழ்பெற்ற பாப் இசை பாடகர் பாப் டைலோனுக்கு வழங்கப்படுகிறது.

இதற்கான அறிவிப்பு சற்றுமுன் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அவருக்கு வழங்கப்படுவதற்கான தகுதியாக, உலகறிந்த பாப் இசை பாடகரான அவர் அமெரிக்காவின் பாரம்பரிய பாவனை வெளிப்பட பாடுவதில் சிறந்தவர்.

மேலும் இதுவரை எந்த பாடகரின் பாணியையும் தழுவாத ஒரு தனிபாணி கொண்டவர் என்பதற்காகவும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த மாதத்தில் இருந்து ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதற்குமுன், மருத்துவம் இயற்பியல், வேதியல், அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments