எம்ஜிஆர் பிரபாகரன் சந்திப்பின் சங்கதிகள்

Report Print M G Christian in உலகம்

துடிக்கின்ற இதயங்களைவிட இன்று தமிழினத்தின் மத்தியில் நடிக்கின்ற மனிதமற்றவர்கள்தான் அதிகம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை வெளிக்கிழம்பும் எத்தனை வித விதமான வானவேடிக்கை விநோதங்கள் உப்புச்சப்பற்ற உளறல்கள் நடந்து கொண்டிருப்பது தவறாகப் படுகிறதல்லவா ?

இதன் வெளிப்பாடு தமிழன் நினைப்பின் வெறுக்கத்தக்க சாக்கடைதான். இத் தண்ணீரெடுத்து பூக்கடைக்குள் தெளிக்கும் சாக்கடை நினைப்புகள்.. எப்போது நம்மினத்தை விட்டகழும்?எது நடக்கும் அப்போது பதவிக் கதிரையில் அமர்ந்திடத் துடிக்கும் பழிவாங்கள் பாவச்செயல் பரப்பும் சர்ச்சைக்குரிய சாக்கடைகளின் அனுதாப ஆறுதலும். தேறுதலும் அற்ற வேண்டாவெறுப்பான செய்திகளாகத்தான் இன்றுவரை குவிகிறது.

நோய்வாய்ப் பட்டிருக்கும் முதலமைச்சர் விடயத்தில் வெளிவருவனவற்றை ஈழத்தமிழன் அநாகரிகமான அர்த்தமற்ற பாதகமான பரப்புதலாகத்தான் எடுத்துக் கொள்கின்றான். எங்கள் விடயத்தில் அக்கறையும் என்றும் எந்த நேரத்திலும் தமிழீழ விடுதலையில் தணியாத வேட்கைகொண்டு விடுதலைப் புலிகளோடு இனத்தின் காப்பாளராக இருந்தவர் மக்கள்திலகம் எம்ஜிஆர்:தலைவரின் இந்தநெறி நின்று மக்கள்திலகத்தின் நூற்றாண்டு விழக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்தேறவேண்டும் என்பதே எம் நிலைப்பாடு.

நேற்றும் இன்றும் நாளையும் உலகத்தமிழர்களுக்கு ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தவர்..ஈழத்தமிழினத்தின் தேசியத் தலைவராக பிரபாகரன் ஒப்பற்ற புரட்சியாளனாக இன்றும் நாளையும் நிலைப்பாய் என்று புகழாரம் சூட்டிய புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவின் நுழைவினிற்குள் ஈழத்தமிழர் வருகின்றார்கள்.

இதய சிம்மாசனத்தில் இருத்தினோம் இளைய தலைமுறையின் தலைக்குள் உட்புகுந்து பெருமையும் உரிமையுடன். விடுதலை மீட்பராக வீற்றிருந்து உயர்ந்தவர் பிரபாகரன்;… பிரபாகரன் ஆளுமையை புரட்சித்தலைவர் நன்றாகப் பலரிடம் அறிந்து தெரிந்ததைவிட அவர்வழிகண்டு தீர்க்கமாகப் புரிந்து கொண்டவர்.

எத்தகைய துன்பங்கள் இடர்பாடுகள் மத்தியிலும் தனது விடுதலைப் பயணத்திலும் மக்கள்மீதும் அரசியல் இலட்சியத்தின் பிடியிலும் அபாரமான துணிச்சல் கண்டு வியந்தவர். புரட்சித்தலைவர் தமிழ்நாட்டிலே பிரபாகரனை கொன்றொழிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டவர்களை அறிவார்.

இந்த முயற்சிகளை முறியடிக்க முதலில் கருணாநிதிய அதிகமாக வெறுத்ததுடன் அவர் சார்ந்திருந்த ஈழவிடுதலை இயக்கங்கள் என்ற பெயரில் இருந்த வீணர்களையும் ஒதுக்கிவிட்டு பிரபாகரனை மட்டும் நேசித்தார்.

திரு.டிக்சிட் தனது நூலில் எழுதும் போது »தமிழீழ இலட்சியத்தில் பிரபாகரனிடமிருந்த தணியாத வேட்கை தீராதவெறி. அவரது போர்த் தந்திரோ பாயம். மதிநுட்பம்.பேரிடர்களைத் தாங்கும் மனவுறுதி ஆகியன பற்றிக் குறைவாக மதிப்பீடு செய்தமையே இந்தியா செய்த மாபெரும் தப்புக்கணக்கு’..என்றார்

இதனால்தான் தனது புவியல் கேந்திரப் பிரச்சனையில் பாக்கிஸ்தான் அடிக்கும்போது எங்கள் தலைவன் பிரபாகரனைக் கூப்பிடுகிறான். தமிழீழப் போராட்டத்தின் தேசியத்திற்கு செய்த தூரோகத்தின் மனசாட்சி உறுத்தியது காவிரிப் பிரச்சனையில் தமிழகத்தமிழன் அடிவாங்கி அவமானப்படும்போதும் பிரபாகரனைக் கூப்பிடுகிறான். இந்தியாவின் தூரோகம் இதயத்தைக் குத்துகிறது.

இலங்கை இந்திய ஒப்பந்தமிட்ட நேரத்திலும் புரட்சித்தலைவர் விருப்பமின்றித்தான் ராஜீவ்காந்தியும் அவரோடு சார்ந்து நின்றவர்களும் வற்புறு த்தியதுடன் அவரது மறதித்குணத்தையும் பயண்படுத்தி அவர் சம்மதமென்று பொய்யான தகவல்களைக் கொடுத்துத்தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை வரைந்தனர்;. அதன் பிற்பாடு; புரட்சித்தலைவர் நான் ஒப்புதல் வழங்குவது விடுதலைக்குப் போராடும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத்தான்.. பிரபாகரனுக்கு உற்றதுணையாக இருப்பேன் தமிழர்களுக்குத் தனிநாடு என் காலத்தில் நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் போது கிடைத்தால் எனக்குக் கிடைத்த பெருமை மகத்தான வெற்றி என்றவர்.

ஒருபுதிய சாதிப்பின் சகாப்தம் என்தமிழன் பிரபாகரனால் கிடைத்தது என்ற நிலை நிறைவேறிய மகிழ்வுடன் உங்களோடு இருப்பேன் என்றார்..ஆசை அற்றவனுக்கு அச்சமில்லை.ஆசைப்பட்டவனுக்கு ஆண்மையில்லை. பிரபாகரனுக்குத் தமிழீழத்தின் மீதுதான் ஆசை . தமிழினத்தின் மீதுதான் நேசம் என்பதை மக்கள்திலகம் நன்கறிந்திருந்தார். ‘பயிர் வளர்த்த தோட்டம் அல்ல.

பலர் உயிர் வளர்த்த தோட்டம் எங்கள் பொன்மனச் செம்மல் நூற்றாண்டு விழா தமீழத்துக்குரிய தேசியவிழா நாங்கள் பொங்கு தமிழாய்ப் பொங்குவோம் எங்கள் தலைவன் மகிழ்வோடு வரவேற்பார்

இந்திய அரசின் வற்புறுத்தல் இந்திய அசோக் விடுதியில் பிரபாகரனைக் கொண்டுவந்து வற்புறுத்தினார்கள் மாகாணசபைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் ஏற்று ஆயுதங்களை ஒப்படைக்கும் படிகேட்டனர் பிரபாகரன் வாதாடினார் ‘நியாயங்கள் தியாகங்கள் புரிந்த இயக்கம் இந்தியாவிடம் சரணடைய முடியாது’ உறுதிகண்டு புரட்சித் தலைவர் பெருமிதமடைந்தார் சீறிப்பாய்ந்தான் ராஜீவ் காந்தியின் ஏவல்நாய்கள் எங்கள் தலைவன் எவனுக்கும் பயப்பிடவில்லை

தன் உறுதியையும் கொள்கையையும் விட்டுக்கொடுக்காததால் மக்கள் திலகத்தை அழைத்து வந்தார்கள் அசோகக் விடுதியில் நடந்த திரைமறைவு நாடகம் அறிந்த தமிழக முதல்வர் புரட்சித் தலைவரின் முகம் மாறி மாறித் தோன்றியது புலிகளின் தலைவர் பிரபாகரன் முன் மணிக்கணக்கில் நடந்த உரையாடல் சிலமணிநேரத்தில் புரட்சித் தலைவர் முடித்துவிட்டார். இவ்வுரையாடல் முடிந்தது காலம் கடந்தது’

பிரபாகரின் மதிநுட்பம் பிரகாசித்ததால் அவர்கள் ஆட்டம் பிரபாகரனிடம் பலிக்கவில்லை அதுதான் பிரபாகரன் இனத்தின் மீதும் விடுதலைமீதும் இறுக்கப்பட்டுள்ள பக்தியின் வீரம். ‘பிரபா நீதான் வென்றாய் உன்வழிப் பிடியில் தளர்வுகொள்ள வேண்டாம் நான் பார்த்திக்கிறேன்’ என்று தோளில் தட்டிச் சொன்னபடி அன்ரன் பாலசிங்கத்தைப் பார்த்து தன்ககேயுரிய புன்னகையை வீசியபடி வெளியேறினார் பிரபாகரனை பல சந்தர்ப்பங்களில் காப்பாற்றிய வள்ளல்

ஈழத்தமிழர்பால் கவனம் காட்டி நிற்கும் .முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டும் சீக்கிரத்தில் தன்கடமைகளில் வேகம் எடுப்பதையும் 17—19 நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றிபெற்றுத் திகழவேண்டும் நல்லமுறையில் நடக்கும் என்பதும் தெளிவாகிறது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும் தருணத்தில்

மக்கள்திலகம் நூற்றாண்டு விழா நிகழ்வுகளும் அறிவிக்கப்படும் நல்லவேளையில் தமிழக முதலமைச்சர் ஈழத்தமிழர் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் புரட்சித் தலைவர் கொண்டிருந்த நெருக்கத்தையும் பிரபாகரனை அளவுக்கு அதிகமாக நேசித்தும்;. விடுதலை பெறப் போராடு அது உன்னால் முடியும் என்று உற்சாகப்படுத்தியதுடன் அள்ளிக் கொடுத்த வள்ளல் காட்டிய நேர்மையான ஆதரவின் மீதான நம்பிக்கை வைத்தும்; தமிழக முதல்வர் நல்லபடியாக சுகம்பெற்று வெளிவரவேண்டும்

ஆற்றும் பணியுடன் புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவில் பிரபாகரனை அளவுக்கதிகமாக நேசித்ததையும் நிகழ்த்திக் காட்டும் நிகழ்வுகளுடன் இணைத்துக் கொள்ளவேண்டும்.தமிழீழ மக்களை அணைத்துக் கொள்ள வடக்கு முதல்வர்சி.வி.விக்கினேஸ்வரன்--சிவாஜிலிங்கம்-மாகாணசபை உறுப்பினர்களோடும்-புத்திஜீவிகளோடும் ஈழமக்களோடு நெருக்கமான உறவைப் பேணவேண்டும்.

அதிகம் இன்றைய உலக சினிமாவிலும் உலக அரசியலிலும் உலகத்தமிழழர்களின் தலைவராகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் போர் எழுச்சியைச் சந்தித்து சந்தேசமடைந்த தலைவராக புரட்சித் தலைவர் இருந்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் போராட்டம் வீறுகொண்டெழ உந்து சக்தியாகவும் பெரும்பங்கு வகித்தவர்

இருந்தாலும் ஈழப்போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு புரட்சித்தலைவர் கருத்திற்கும் ஆதரவிற்கும் எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியே வந்துள்ளது.என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் குறிப்பாகஇந்திய மறந்தது ? ‘ஈழம் விடுதலை பெறுவது இந்தியாவுக்கு ஆபத்தானதல்ல அதுதான் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆதாரம்’

இன்று பாகிஸ்தான் தீவிரவாதத் தாக்குதலும் போர் மூழும் ஆபத்தான சூழ்நிலை மேல்கூறியதை ஆதாரம் காட்டும். இங்குதான் விடுதலைப் புலிகளின் புகழாரம் முணைப்புப் பெறுகிறது. இங்கும் புரட்சித்தலைவர் பிரபாகரன் வழியில் நிதானத்தைப் பலமுறை நிதானமான செயல்பாட்டுடன் கடைப்பிடித்தவர்

சென்னையில் நடந்த பிரச்சனைக்கு அப்புறம் சிறையிலிருந்து பிரபாகரன் வெளிவந்த பிற்பாடு தனிநாடு பெறப் போராடு அந்தவழிக்குத் திறமையும் தகுதியும் உன்னிடம்தான் இருப்பதை விமர்சித்த தலைவர் பிரபாகரனைப் பத்திரமாக தாயகம் அனுப்பிவிட்டு நெடுமாறனை அழைத்துக் கேட்டார்

‘உம்முடைய ஆள் பத்திரமாகப் ஊர் போய்ச:;சேர்ந்திட்hர் போலிருக்கு?’நெடுமாறன் மௌனமாகத் தலையாட்ட புரட்சித்தலைவர் புன்னகை புரிந்தபடி ‘நல்லதாக நடந்து வெற்றிபெறும் பிரபாகரன் திறமையும் வலிமையும் எனக்குத் தெரிம் ‘ என்ற புகழாரம்தான் கவிஞனை இன்றுவரை கவிபடைக்க வைத்துள்ளது .

பிற்பாடு விடுதலைப் புலிகள் பாயத் தொடங்கியது பலவகையான இயக்கங்கள் துரோகிகளை கலைஞர் கருணாநிதி உற்பட வித விதமான் துரோகிகளின் இடையுறுகள் நேர்வதையும் அறிந்திருந்தவர.; இதன் வெளிப்பாடுதான் புலிகள் இயக்கத்திற்கு அள்ளிக்கொடுத்த வள்ளல் அணைத்தபடியே பிரபாகரனை அளவுக்கு அதிகமாக நேசித்தார். எம்ஜிஆர் 1983க்கு முன்பும் ஈழத்தமிழர் மேல்அவரது அன்புக் கவனம் இருந்துள்ளது.1964 புயல் பாதிப்பின் நெருக்கடி நேரத்து ஈழத்தமிழ் மாணவர்ளுக்கு உதவியதும் புயல் நிர்வாணப் பணிக்கான கொடைத்தனம்தான் சாட்சி..

1983.. களில் அனைத்துக் கட்சி கூட்டம் பலமுறை நடத்தி ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்கவும் பிரபாகரனை அழைத்தும் பேசியும் வந்துள்ளார்.14.08.1983.--13-14 இரு நாட்களும் சென்னையில் கூட்டிய கூட்டங்களில் முக்கிய தீர்மானங்களை ஈழத்தமிழர் மீது கவனம் கொண்டதால்தான் தீர்மானங்களை நிறைவேற்றும் போது பிரபாகரன்;. அன்ரன் பாலசிங்கம் ஆகியோரையும் அழைத்துக் கலந்துரையாடிச் செயல்பட்டவர்

16.06.1983—14.09.1983 வரை ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்க கரும் சட்டை அணியவேண்டும்.தானே அதற்கு முன்மாதிரயாக நடந்;தவர்.ஈழத்தமிழர்கள்பால் நல்ல முடிவு வராவிட்டால் 19.09.1983 பொதுக்குழுவை கூட்டி மேல்கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று ஒய்வி;ன்றி போராட்டம் நடத்தினார் பொதுக்கூட்டங்கள் நடத்திய புரட்சித்தலைவர்--அறிவிப்புகள் கண்டனக்கூட்டத்தில் கலந்து கொள்ள அமைசசர்கள் உறுப்பினர்களுக்கு முக்கிய கட்டளை பிறப்பித்தார்.

விடுதலைப் புலிகளை ஈழத்தின் முக்கிய இராணுவமாக ஏற்று ஈழத்தைத் தனிநாடாக அறிவிப்பீர் என்று மத்திய அரசிற்க்கு வேண்டுகோள் விடும்படி ஈழத்தையும் பிரபாகரனையும் அளவுக்கு அதிகமாக நேசிக்கப் பண்ணியதை இன்றைய அண்ணா தி.மு.க ஆட்சி கவனத்தில் கொண்டு நடக்கும் இச்சந்தர்ப்பத்தில் புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளில் முக்கியம் பெற்று நடைபெறத் தொடங்கிவிட்டது.

ஈழத்தமிழர்கள் உரிமைக்குக் குறுக்கே கருணாநிதிபோல் நில்லாமல் தமிழக அரசும் என் தனிப்பட்ட சக்திக்குட்பட்டு முழுப்பாதுகாப்பு அளிப்பேன் என்று உறுதிமொழி அளித்த புரட்சித்தலைவர் தமிழினத்திற்காக உயர் கொடுக்கவும் தயார் என்று சட்டமன்றத்திலேயே தன் எண்ணத்தை வெளிப்படுத்தியதுடன் ‘தமிழினத்தின் பாதுகாப்பு அரணாகவே திகழ்ந்தவர் மக்கள்திலகம் இன்றைய தமிழக அரசு மறந்திடாது : அந்த வள்ளலின் நூற்றாண்டு விழாவில் ஈழத்துப் பங்களிப்பு நிறைவாகத் திகழவழிவகைகள் மேற்கொள்ளவேண்டும்

ராஜீவ்காந்தியின் கேள்விகளுக்குப் படுத்துக்கொண்டு உணர்ச்சி வசப்பட்டு பதில் கொடுத்தவர்’யாழ்ப்பாணத்தில் தமிழீழப் புலிகளை விழ விட்டுவிடாதீர்கள் தமிழீழப் புலிகள் கண்டிப்பாக காப்பாற்றபடவேண்டும்’ என்று கதறிய கதறல் இன்றும் ஒலிக்கிறது . இதுதான் பிரபாகரன் மீதினில் புரட்சித் தலைவர் இறுதி மூச்சுவரை வைத்திருந்த அன்பும் நெஞ்சம் நிறைந்த ஆசையாகவும் அசைக்க முடியாதிருந்தது இதைத்தான் ஈழத்துக் கவிஞன் மா.கி.கிறிஸ்ரியன் புகழாராம் சூட்டிப் பார்க்கின்றான்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments