புதிய கொலைப் பட்டியலை வெளியிட்டது ஐ.எஸ்: 285 இந்தியர்கள் உட்பட 4000 பேர் இடம்பிடித்துள்ளனர்

Report Print Basu in உலகம்
புதிய கொலைப் பட்டியலை வெளியிட்டது ஐ.எஸ்: 285 இந்தியர்கள் உட்பட 4000 பேர் இடம்பிடித்துள்ளனர்

சிரியாவில் பலவீனமடைந்து வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு புதிய கொலைப்பட்டியல் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் 285 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள 4000 பேர் இடம்பெறுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி கொலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களில் பல பேர் அமெரிக்கா,இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளோரின் பெயர் மட்டுமல்லாது, முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் அரசு அதிகாரிகள் பிரபலமான இந்திய மென்பொருள் பொறியாளர்கள்,நாட்டை பாதுகாக்கும் இராணுவ அதிகாரிகள் உட்பட பலர் இடம் பிடித்துள்ளனர். இந்த தகவலை ஐ.எஸ் அமைப்பு குறுந்தகவல் மூலமாகவும் பரப்பியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இதுபோன்ற ஒரு பட்டியலை ஐக்கிய சைபர் க்ரைம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது நினைவுக்கூறத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments