வெளிநாட்டவர்களை அசத்தும் “மண்பானை பிரியாணி”

Report Print Maru Maru in உலகம்
வெளிநாட்டவர்களை அசத்தும் “மண்பானை பிரியாணி”

குவைத், ஜோர்டான், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் ஐந்து நட்சத்திர ஹொட்டல்களில் சுவையான பிரியாணி ’டோர் டெலிவரி’ செய்யப்படுவது மண்சட்டிகளில்தான்.

மண்சட்டிகளில் வைக்கப்படுகிற பிரியாணி பாதுகாப்பானதாகவும் ருசி கூடுதலாகவும் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிக தொகை கொடுத்தும் அதை வாங்க தயாராக உள்ளனர்.

மண்சட்டி தொழிலில் தமிழ்நாடு சிறந்தது என்பதை இணையதளங்களில் அறிந்த ஹொட்டல் முதலாளி ஒருவர் பாளையங்கோட்டை குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவரை தொடர்புகொண்டு மண்சட்டிகளுக்கான ஆர்டர் கொடுத்துள்ளார்.

மண்சட்டிகளுக்கு கிடைத்த ஏற்றுமதி வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட முருகனும் நூற்றுக்கணக்கில் தயாரித்து அனுப்பினார்.

சுடச்சுட தயாரிக்கப்படும் பிரியாணி மண்சட்டிகளில் வைத்து ’பேக்’ செய்து விற்பது வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது.

வாடிக்கையாளர்களுக்கு திருப்தியும் முதலாளிகளுக்கு வருமானமும் கிடைத்தால் அந்த பொருளுக்கு மவுசு கூடுவது இயல்புதானே.

மண்சட்டிகள் இயற்கை பொருளாக இருப்பதால் சுற்றுச்சூழலுக்கும் ஏதுவானது. இந்தியாவிலும் முஸ்லிம்கள் விருந்துகளில் மண்சட்டி பயன்படுத்தும் வழக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கோடைகாலத்தில் மண்பானையில் இருக்கும் குடிநீர் குளிர்ச்சியும் சுகாதாரமும் தருவது. அதற்கு உடையும் பலவீனம் இருப்பதால் ஒதுக்கப்பட்டுவந்தது எப்படியோ தீங்கில்லாத மண்சட்டிகளுக்கு மறுவாழ்வு கிடைப்பது சிறப்பே!

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments