இப்படியும் ஒரு விசித்திர பயணம்: பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்

Report Print Jubilee Jubilee in உலகம்
இப்படியும் ஒரு விசித்திர பயணம்: பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்

உலகின் மிகப்பெரிய உப்பு மனையான Salar de Uyuni-வை ஒருவர் தனியாளாக கடந்தது மட்டுமல்லாமல், தனது பயணத்தின் போது பல பிரமிக்க வைக்கும் புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.

தெற்கு அமெரிக்க நாடான பொலிவியாவில் உலகின் மிகப்பெரிய உப்பு மனையான Salar de Uyuni உள்ளது.

10, 582 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட இந்த உப்பு மனையானது, கடல் மட்டத்தில் இருந்து 3,656 மீற்றர் உயரத்தில் உள்ளது.

பார்ப்பதற்கு அழகாகவும், அதே சமயம் மிரட்டும் வகையிலும் அமைந்துள்ள இந்த உப்பு மனையில் போலாந்தை சேர்ந்த Mateusz Waligóra என்பவர் ஒரு “திரில்” பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தொழிநுட்ப வாழ்க்கையில் இருந்து சிறிது காலம் விலகி ஆறுதல் தேட வேண்டும் என்று எண்ணிய அவர் Salar de Uyuni உப்பு மனையில் தனியாளாக பயணித்தார்.

இதில் கூடாரங்கள் அமைத்து, -14 டிகிரி செல்சியஸ் குளிரிலும் அசராமல் தனிமையில் பொழுதை கழித்துள்ளார்.

நிருபரும், புகைப்பட கலைஞருமான Mateusz தனது பயணத்தை தனது கமெராவில் அழகிய புகைப்படங்களாகவும் பதிவு செய்துள்ளார்.

MateuszWaligóra கூறுகையில், இந்த அழகிய உப்பு மனை சற்று மந்தமாக இருந்தாலும், இயற்கையின் இந்த அழகு எனக்கு சலுப்பூட்டும் படி அமையவில்லை.

நான் நடந்து போகும் ஒவ்வொரு அடியும் உப்பளங்கள் உடையும் சத்தம் எனக்கு இசையாகவே அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.

The married journalist and photographer says that deserts are his favourite places to explore due to the sheer scale of the landscape

Mateusz Waligóra from Wrocław, Poland, took a solo journey over the Bolivian salt flats and documented his experience with selfies

1/5

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments