உலகிலேயே தரமான உணவு தயாரிக்கும் முதல் 10 ஹொட்டல்களின் பட்டியல் வெளியீடு

Report Print Peterson Peterson in உலகம்
உலகிலேயே தரமான உணவு தயாரிக்கும் முதல் 10 ஹொட்டல்களின் பட்டியல் வெளியீடு

உலகிலேயே தரமான உணவுகளை தயாரித்து வழங்கி வரும் முதல் 100 ஹொட்டல்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் உலகிலேயே தரமிக்க உணவுகளை தயாரித்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவகங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில், இத்தாலி நாட்டில் மடோனா என்ற நகரில் செயல்பட்டு வரும் Osteria Francescana என்ற உணவகம் 2016ம் ஆண்டின் உலகின் சிறந்த உணவகம் என்ற விருதை பெற்றுள்ளது.

இதே வரிசையில் பிரித்தானிய தலைநகரான லண்டனில் உள்ள The Ledbury என்ற உணவகம் 14 வது இடத்திலும், அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் செயல்பட்டு வரும் Attica என்ற உணவகத்திற்கு 33 வது இடமும் கிடைத்துள்ளது.

மேலும், ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் இயங்கி வரும் Restaurant Tim Raue என்ற உணவகத்திற்கு 34 வது இடமும், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள Furstenau நகரில் இயங்கி வரும் Schloss Schauenstein என்ற உணவகத்திற்கு 47 வது இடமும் கிடைத்துள்ளது.

இதே பட்டியலில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இயங்கி வரும் Indian Accent என்ற உணவகம் 87வது இடமும் வகித்து வெற்றி பெற்றுள்ளது.

எனினும், ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கை உலகின் தரமிக்க உணவகங்களை கொண்டுள்ள முதல் 100 நாடுகளின் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் விருது பெற்ற முதல் 10 உணவகங்களின் பட்டியல்

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments