ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு பின்...உலகை அச்சுறுத்த வரும் புதிய ஆபத்து!

Report Print Peterson Peterson in உலகம்
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு பின்...உலகை அச்சுறுத்த வரும் புதிய ஆபத்து!

உலகம் வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிக்கட்டிகள் முழுவதுமாக உருகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்டிக் பெருங்கடலின் மையப்பகுதியில் சுமார் 12.7 மில்லியன் சதுர கிலோ மீற்றர்கள் பரபரப்பளவில் பனிக்கட்டிகள் நிறைந்து காணப்பட்டுள்ளன.

ஆனால், இந்த அளவானது இம்மாதம் யூன் 1ம் திகதி நிலவரப்படி 11.7 மில்லியன் சதுர கிலோ மீற்றர் பரப்பளவாக குறைந்துள்ளது. அதாவது, பிரித்தானியா நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பு அளவுள்ள பரப்பளவு குறைந்துள்ளது என அமெரிக்க தேசிய வெண்பனி மற்றும் பனிக்கட்டிகள் தகவல் மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த மோசமான மாற்றமானது இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியன் சதுர கிலோ மீற்றர் பரப்பளவிற்கும் குறைவாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றமானது கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதாகவும், இப்போது இது மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியரான பீற்றர் வாதம்ஸ் பேசியபோது, இப்பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் முழுவதுமாக உருகிய பின்னர் பூமி வெப்பமாவது அதிகரிக்கும்.

அதாவது, தற்போது உலகளவில் உள்ள சராசரி வெப்பத்தில் 0.6 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

அதேபோல், இந்த பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி வருவதால் இங்கு வசித்து வரும் போலார் கரடிகளின் உடல் எடைகளும் குறைந்து வருகிறது.

ஏனெனில், பனிக்கட்டிகள் குறைவதனால், கரடிகளால் சீல்களை வேட்டயாட முடியாது எனவும் பீற்றர் வாதம்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், துருவப்பகுதிகளில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி கடலில் கலப்பதால், கடல் மட்டமும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இது தொடர்ந்து நிகழ்ந்தால், பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பெரும் ஆபத்தாக முடியும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments