அடிமைதனத்தில் இந்தியா முதலிடம்: பிரபல ஆய்வு அறிக்கையில் தகவல்!

Report Print Basu in உலகம்
அடிமைதனத்தில் இந்தியா முதலிடம்: பிரபல ஆய்வு அறிக்கையில் தகவல்!

அவுஸ்திரேலியேவை சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று வருடாந்திர உலக அடிமைத்தன குறியீட்டை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகெங்கிலும் சுமார் 4.6 கோடி மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கையில் 1.83 கோடி பேருடன் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் குறித்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அடுத்த படியாக சீனா (33.9 லட்சம்), பாகிஸ்தான் (21.3 லட்சம்), வங்கதேசம் (15.3 லட்சம்)மற்றும் உஸ்பெகிஸ்தான் (12.3 லட்சம்) ஆகிய ஆசிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

ஆசியாவில் மட்டும் இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர், தங்கள் விருப்பத்திற்கு மாறாக நிர்ப்பந்திக்கப்பட்டு தொழிற்சாலைகளிலோ, பண்ணைகளிலோ, பாலியல் தொழிலாளியாகவோ வாழ்ந்து வருவதாக தி வாக் ஃப்ரீபவுண்டேஷன் என்ற அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அதே சமயம், சதவீத அளவில் பார்த்தால், வட கொரியாவில் அதிக சதவீத மக்கள் வேலைகளில் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இருபதில் ஒருவர் அடிமைத் தொழிலாளியாக வாழ்வதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த பவுண்டேசன் தலைவர் ஆண்ட்ரூ பாரஸ்ட் கூறும்போது, “அடிமைத்தனத்தை ஒழிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும். குறிப்பாக, உலகின் முதல் 10 பொருளாதாரநாடுகள், பிரிட்டன் நவீன அடிமை சட்டம் 2015-ஐ போல கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments