சிதைவின் விளிம்பில் அட்லாண்டிக்கின் பொக்கிஷம்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி

Report Print Malar in உலகம்

100 ஆண்டுகளுக்கும் மேலாக அட்லாண்டிக் கடலில் முழ்கிக் கிடக்கும் ஆர்.எம்.எஸ். டைட்டானிக் சொகுசு கப்பல் படிப்படியாக ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அழிவடைந்து கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் நியூபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் ஆர்.எம்.எஸ். டைட்டானிக் கப்பல் கடந்த 1912ஆம் ஆண்டு பனிப்பாறையில் மோதி கடல் நீரில் முழ்கியது.

சுமார் 15 ஆண்டுகளில் முதன்முறையாக டைட்டானிக்கை தேடி கடலில் இறங்கியவர்கள், உடைந்த அந்தக் கப்பலின் பாகங்கள் வேகமாக சிதைவடைந்து கொண்டு வருவதாக தற்போது கூறியுள்ளனர்.

வலுவான கடல் நீரோட்டம், உப்பு அரிப்பு மற்றும் உலோகத்தை அழிக்கும் பாக்டீரியாக்கள் ஆகியவை இந்த கப்பலை சிதைத்து வருகின்றன.

சர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஐந்து நீர்முழ்கி பயணங்களின் போது, அட்லாண்டிக் கடலில் 3,800 மீற்றர் ஆழத்தில் முழ்கிக் கிடக்கும் குறித்த கப்பலை ஆய்வு செய்துள்ளனர்.

உடைந்த கப்பலின் பாகங்கள் ஆச்சரியப்படத்தக்க அளவுக்கு நல்ல நிலையில் உள்ளதுடன், மற்ற சிறப்பு அமைப்புக்கள் கடலில் சிதைந்து போயுள்ளதாக டைட்டானிக் வரலாற்றாளர் பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறியுள்ளார்.

மேலும் அவர், அதிகாரிகள் தங்கும் பகுதியில் கப்பல் முகப்பு வலப்புறம் மிக மோசமாக சிதைந்து போயுள்ளது எனவும், ஆழ்கடலில் மூழ்கிய போது தாம் பார்த்த சில காட்சிகள் அதிர்ச்சிகரமானதாக இருந்தன.

டைட்டானிக் கப்பல் கேப்டனின் குளியல் தொட்டி இப்போது காணவில்லை. கேபினுக்கு மேலே கடல் மட்டத்திற்கு மேற்புறமாக அமைந்திருக்கும் அறைப் பகுதி முழுமையாக சரிந்து வருகிறது. அதனுடன் முக்கிய அறைகளும் அழிகின்றன.

இந்த சிதைவு தொடர்ந்துக் கொண்டிருக்கப் போகிறது என்றும் டைட்டானிக் கப்பல் இயற்கையை நோக்கி திரும்பிக் கொணடிருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நூற்றாண்டில் மிகப் பெரியதாக உருவாக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் 1912இல் சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயோர்க் நோக்கி தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட போது, மிதக்கும் பனிப்பாறை மீது மோதி விபத்திற்குள்ளாகியது.

இதன்போது 2,200 பயணிகள் உட்பட 1,500இற்கும் மேற்பட்ட கப்பல் பணியாளர்கள் உயிரிழந்தனர்.

அந்தவகையில், மரியானா மர்மக் கடலின் அடியில் அதிகபட்ச ஆழம் வரை சமீபத்தில் சென்ற அதே குழுவினர் தான் டைட்டானிக்கை தேடிய பயணத்திலும் ஈடுபட்டனர்.

பசுபிக் பெருங்கடலில் சுமார் 12 கிலோ மீற்றர் ஆழத்திற்கு மரியானா அகழி பகுதிக்கு அவர்கள் சென்றிருக்கின்றனர்.

இந்த ஆழ்கடல் பயணம் 4.6 மீற்றர் நீளம், 3.7 மீற்றர் உயரம் கொண்ட நீர்மூழ்கியில் டி.எஸ்.வி.லிமிட்டிங் பேக்டர் என்ற நீர்முழ்கியில் மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த டிரிட்டன் நீர்முழ்கிகள் என்ற நிறுவனம் இதை உருவாக்கிக் கொடுத்துள்ளது. 600 மீற்றர் இடைவெளியில் இரண்டு பகுதிகளாகக் கிடக்கும் உடைந்த கப்பலின் பாகங்களை சுற்றி வழிநடத்திச் செல்வது சவாலான விடயம்.

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மோசமான சூழ்நிலையும், வலுவாக கீழ் நிரோட்டமும் இந்த நீர்முழ்கி பயணத்தை சிரமமானதாக ஆக்குகின்றன. உடைந்த கப்பலுக்குள் குழுவினர் சிக்கிக் கொள்வதற்கான ஆபத்தும் அதிகம்.

உடைந்த கப்பலிலிருந்து உயிர் தப்பியவர்களும் தற்போது காலமாகியுள்ளதுடன் டைட்டானிக் கப்பலின் விபத்திற்கு சாட்சியமாக இருப்பது கப்பலின் உடைந்த பாகங்கள் மாத்திரமே.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்