மார்பகத்தை வெட்டி வாழையிலையில் வைத்துவிட்டு தரையில் சாய்ந்த பெண்...! எதற்காக?

Report Print Abisha in பெண்கள்

கேரளாவில், பெண்கள் ஒருகாலத்தில் மார்பக வரிகள் செலுத்தி வந்துள்ளனர். அதை முடிவுக்கு கொண்டுவந்தது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்

கேரளாவில், நாயர், நம்பூதிரி, அரச குடும்பம் ஆகியோரை தவிர அனைவரும் தீண்டதகாதவர்களாக கருத்தப்பட்டனர். இவர்களை தவிர மற்றவர்கள், தோளில் துண்டு போடுவது, மீசை வைத்து கொள்வது போன்றவற்றிக்கு கூட வரி கட்ட வேண்டிய நிலையில் இருந்துள்ளது.

இந்த நடைமுறைகள் ஆண்களுக்கு என்றால், பெண்களுக்கு தங்களின் மார்பகத்தின் அளவை பொறுத்து வரி வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக மாற்று சாதியை சேர்ந்தவர்கள் ஆண், பெண் யாரும் மேலாடை அணியக்கூடாது என்ற சட்டம் நடைமுறையில் இருந்துள்ளது.

பெண்கள் தங்களின் மார்பக அளவினை பொறுத்து, முளைகரம் என்னும் வரியை அரசிற்கு செலுத்த வேண்டும்.

இந்நிலையில், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில், சேர்த்தலா என்ற ஊரில், நங்கேலி என்ற பெண் ஒருவர் இதற்கு ஒரு மாற்று வழியை தேடினார். அந்நாள் அவர் வீட்டில் வரி வசுலிக்க வந்தனர். அவர்களை வரவேற்ற நங்கேலி வாழையிலை அகல் விளக்கு வைத்தார். பின் உள்ளே சென்ற அவர், தனது இரு மார்பகங்களை வெட்டி எடுத்து அந்த வாழையிலையில் வைத்தார்.

வரிவசூலிக்க வந்தவர்கள், அதிர்ந்துபோக அவர்களிடம், இனி என்னிடம் மார்பகம் இல்லை வரிசெலுத்த இயலாது என்று தெரிவித்துவிட்டு தரையில் சாய்ந்துள்ளார்.

அதன்பின் மற்ற பெண்களும் இதற்கு எதிராக புரட்சி செய்ய துவங்கினர். ஆனால், இந்த முளைக்கரம் மாற்று சமயத்தை சேர்ந்த பெண்களுக்கு கட்டுப்பாடு இல்லை.

இதனை தொடர்ந்து புரட்சி ஏற்பட, 1800களில் சர் ஜான்மன்றோ என்ற சென்னை கவர்னர், திருவிதாங்கூர் அரசனிடம் பேசி இனிபுதிதாக கிறிஸ்தவ மதத்தில் இணைபவர்களுக்கு இந்த சட்டம் செல்லாது என்ற திட்டதை அறிமுகப்படுத்தினார்.

இதனால், பெருபாலான பெண்கள், தங்களை கிறிஸ்தவ மதத்தில் மாற்றிக்கொண்டனர். இந்த போராட்டங்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருமளவில், முன்னெடுத்து சென்றவர் ஐய்ய வைகுண்டர். அதன் பின் பெரும்புரட்சி ஏற்பட்டு அதிகமானோர் அடித்து கொல்லப்பட்டனர்.

அதன்பின் சென்னை மாவட்ட ஆட்சியர் தலையீட்டின்பேரில் திருவிதாகூர் சமஸ்தானத்திற்கு கீழ் இருந்த, கன்னியாகுமரி மாவட்டத்தின் பகுதி, திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஆகியவற்றில் முளை வரியை நிறுத்தப்பட்டது.

இதேபோல் கேரளாவின் பெரும் பகுதியில், நாராயண குரு மற்றும் ஐய்யங்காளி ஆகிய இருவரும் இதற்கு எதிர்த்து போராடி இறுதியில் மேலாடை அணியாலாம், வரி செலுத்தபோவதில்லை உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றினர்.

இதற்காக போராடியவர்களுக்கு கன்னியாகுமரி, கேரளா பகுதிகளில் தற்போது கோவில் கட்டி வழிபாடு நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers