ஆண்களை மகிழ்விக்க வேண்டும்! பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டு மீண்ட திருமணமான பெண் வேதனை

Report Print Santhan in பெண்கள்

கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்ற பெண் ஒருவர், அதன் பின் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டதும், அதில் இருந்து தப்பியது எப்படி என்பதை மிகுந்த வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

தற்போது இருக்கும் உலகில் பாலியல் தொழிலுக்கு பெண்கள் வற்புறுத்தி தள்ளப்படுவதாகவும், அதனால் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வார்த்தைகளால் கூற முடியாது .

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த ரமாதேவி என்ற பெண் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டது எப்படி? அதில் இருந்து மீண்டது எப்படி என்பதை பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், என் பெயர் ரமாதேவி, 12 வயது இருக்கும் போதே எனக்கு திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பின் மாமியார் வீட்டிற்கு சென்ற நான் அங்கு பல கொடுமைகளை அனுபவித்தேன்.

ஒரு பெண் குழந்தை பிறந்த பின்னர் கொடுமை அதிகரித்தது. இதனால் சித்ரவதை தாங்க முடியாமல் பிறந்த வீட்டிற்கே திரும்பிவிட்டேன்.

அதன் பின் அங்கு நான் என்னுடைய தோழி மாற்றுத் திறனாளியான புஷ்பாவை சந்தித்தேன். புஷ்பா ஹோட்டலில் பணியாற்றி வந்தார்.

இதற்கிடையில் எங்களை ஒரு பெண் தினமும் சந்தித்து, பேச்சு கொடுப்பார். அப்படி ஒரு நாள் அவர் திரைப்படத்திற்கு போகலாம் என்று கூறியதால், நான் என் குழந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு நான், தோழி புஷ்பா அந்த பெண் என மூன்று பேரும் சென்றோம்.

அப்போது இடையில் மயக்கமடைந்த நாங்கள் கண்விழித்து பார்த்த போது, புது இடத்தில் இருப்பதை உணர்ந்தோம், அங்கிருந்த சிலர் ஹிந்தியில் பேசிக் கொண்டு இருந்ததால் எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.

நாங்கள் இருப்பது மஹாராஷ்ட்டிரா மாநிலம் பிவாண்டி என்பதும், என்னையும், புஷ்பாவையும் அந்த பெண் 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்று சென்றுவிட்டார் என்பது 3 நாட்களுக்கு பின்பு தான் தெரிந்தது.

இதனால் நாங்கள் அங்கிருந்தவர்கள் கெஞ்சினோம், ஆனால் அவர்கள் விடவில்லை, அங்கு வந்த ஆண்களை மகிழ்விக்கும் படி கூறினார்கள், ஆறு மாதங்கள் இந்த கொடுமை தொடர்ந்தன, மகளை நினைத்து கொண்டே இருப்பேன்.

அப்படி ஒரு முறை தப்பி ஓட முற்பட்ட போது பிடிபட்டேன், அதற்கு தண்டனையாக கை-கால்களை கட்டிப் போட்டார்கள், கண்களில் மிளகாய் பொடியை தூவினார்கள்.

அந்த வலியை எல்லாம் பொறுக்க முடியாது. அப்படி இருக்கும். குறைந்த அளவி உணவு கொடுப்பார்கள், பசியும் தீராது, சரியான உறக்கம், போதிய உணவும் இல்லாமல் ஓராண்டு காலம் கடந்தது.

தொடர்ந்து நான் எதிர்ப்புக்களை தெரிவித்து கொண்டே இருந்ததால், என்னை மட்டும் அனுப்ப சம்மதித்தனர். ஆனா நான் உடன் தோழி புஷ்பாவையும் அனுப்பும் படி கூறினேன்.

புறப்படும் போது,உங்களின் ஓராண்டு சம்பளம் என்று கூறி, 2000 ஆயிரம் கொடுத்தார்கள்.

அதை வைத்து நான் வீட்டிற்கு வந்தேன். குடும்பத்தினர் நான் இறந்துவிட்டேன் என்று நினைத்திருந்தனர். எங்கள் குடும்பமும் மிகவும் ஏழ்மையில் இருந்தது.

அப்போது மகளை ஆசையாக தூக்கி வைத்து உங்கள் அம்மா எங்கே என்று கேட்ட போது, இறந்துவிட்டரர் என்று கூற, சுக்கு நூறாக உடைந்துவிட்டேன்.

என் மகள் சொன்ன வார்த்தையால், தோன்றிய தற்கொலை எண்ணம், என்னை போல் விபச்சார விடுதியில் கொடுமைகளை அனுபவிக்கும் பிற பெண்களை பற்றிய எண்ணத்தால், குறைந்தது.

அவார்களையும் காப்பாற்ற விரும்பினேன். பிவண்டியில் இருந்து இதுவரை 30 பெண்கள் காப்பாற்றியிருக்கிறோம். மரியாதையாக வாழ்வும் தங்கள் உரிமையை பறித்த விபச்சார விதியை சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்க முயன்றதாக ராமாதேவி கூறினார்.

ராமாதேவி தற்போது கணவனுடன் சேர்ந்து, கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்