வெளிநாட்டில் சிக்கி தவித்த பல தமிழர்களை காப்பாற்றியவர் சுஷ்மா சுவராஜ்... வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

Report Print Santhan in பெண்கள்

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவர் வெளிநாட்டில் சிக்கித தவித்த தமிழ் பெண்ணை காப்பாற்றிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ் . இந்தியாவின் 15வது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.

சுஷ்மா டெல்லியின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மேலும் இவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார்.

இந்நிலையில் சுஷ்மா மாரடைப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து தற்போது புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெளிநாட்டில் (குவைத்) சிக்கித் தவித்து, அங்கிருப்பவர்களிடம் அடிமையாக வேலை செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண், இந்தியா வருவதற்கு முக்கியமாக சுஷ்மாசுவராஜ் உதவியுள்ளார்.

இது போன்று வெளிநாட்டில் ஏஜென்சி மூலம் அனுப்பப்பட்டு, அங்கு ஏமாந்து நின்ற பலரும் இந்தியாவிற்கு வர இவர் ஒரு வெளியுறவுத்துறை அமைச்சராக தன்னுடைய வேலையை சரியாக செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்