நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு ஏற்பட்ட மார்பக புற்றுநோய்! உருக்கமான தகவல்கள்

Report Print Deepthi Deepthi in பெண்கள்

இந்தி திரையுலகில் புகழின் உச்சியில் இருந்த நடிகை மனிஷா கொய்ராலா மார்பக புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து, "HEALED" என்ற பெயரில் அவர் வெளியிட்ட புத்தகத்தில், தனது வாழ்க்கை குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். '

எனது காலடியில் இந்த உலகமே இருப்பதாக என்னுள் நினைப்பு இருந்தது, இடைவிடாத படப்பிடிப்புகளால் 1999ம் ஆண்டுகளில், உடலும் உள்ளமும் பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார். '

'மீள்வதற்கு என்ன வழி? மதுவைத் தவிர என்று தெரிவித்துள்ள அவர், தமது முன்னாள் காதலர் எச்சரித்தும் கேட்கவில்லை, தவறான முடிவுகளை எடுத்ததாக அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.

மார்பக புற்றுநோய் குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மார்பக புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய் (Breast cancer) என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. இது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும்.

நம் உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன.

இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்துவிடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன.

பெண்கள் மார்பகங்களைச் சுய பரிசோதனை (மாதம் ஒரு முறை) செய்து கொள்வதன் மூலமும், மருத்துவர் மூலம் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வதன் மூலமும், மேமோகிராபி (mammography) மூலம் பரிசோதனை (40 வயதுக்கு மேற்பட்டோர் வருடத்துக்கு ஒரு முறை) செய்துகொள்வதன் மூலமும் மார்பகக் கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

எல்லாக் கட்டிகளுமே புற்றுநோய்க் கட்டிகள் அல்ல. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை. இத்தகைய கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினால் மீண்டும் தோன்றுவதில்லை; அவை உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதில்லை.

புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய்க்கு காரணம் என்ன?

இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணி இல்லை. அடிப்படையாக உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது. பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு.

மார்பகச் சுயபரிசோதனை (Breast self-examination):

பெண்கள் மார்பகங்களைச் சுய பரிசோதனை (மாதம் ஒரு முறை) செய்து கொள்வதன் மூலமும், மருத்துவர் மூலம் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வதன் மூலமும், மேமோகிராபி (mammography) மூலம் பரிசோதனை (40 வயதுக்கு மேற்பட்டோர் வருடத்துக்கு ஒரு முறை) செய்துகொள்வதன் மூலமும் மார்பகக் கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

சில குறிப்புகள்:

நீங்கள் சுயமாகப் பரிசோதனை செய்யத் தொடங்கும்போது சரியாகப் பரிசோதிக்கிறோமா என்ற சந்தேகம் வரலாம். ஆனால், தொடர்ந்து பரிசோதனை செய்து வரும்போது மார்பகங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் மிகவும் எளிதாகக் கண்டு தகுந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

மாதவிடாய் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு செய்தால், அசௌகரியம் இல்லாமல் இருக்கும்.

மாதவிடாய் நின்றவர்கள் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்து பரிசோதனை செய்யவும்.

மார்பகம் மட்டுமின்றி அக்குள் பகுதிகளையும் பரிசோதிக்கவும்.

மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள் (Breast Cancer Symptoms)

மார்பகம், அக்குள் பகுதிகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

மாற்றம் ஏற்பட்டிருந்தால், இது தொடர்ந்து சில நாட்கள் நீடிக்கிறதா?

இயற்கையாகவே நாளமில்லாச் சுரப்பிகளினால் ஒவ்வொரு மாதமும் மார்பகங்களில் சுழற்சியாக மாற்றங்கள் ஏற்படும். தொடர் பரிசோதனை மூலம் இயற்கையாக நிகழும் மாற்றத்துக்கும், புதிதாகத் தோன்றியுள்ள மாற்றங்களுக்கும் வித்தியாசம் கண்டுகொள்ள முடியும்.

மார்பகங்களில் ஏதேனும் வித்தியாசம் தொடர்ந்து கவனித்தால் மருத்துவரை உடனடியாக அணுகவும்.

இச்செய்தியினை மற்ற பெண்களுடன் பகிர்ந்து கொள்ளவும். தவறாமல் தொடர்ந்து பரிசோதனை செய்து பயன்பெறவும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்