பெண்களின் உடலில் ஆண் ஹார்மோன் அதிகரித்தால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

Report Print Jayapradha in பெண்கள்
523Shares

ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினத்தவர்களின் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் ஆண்களில் மட்டும் தான் சுரக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் பெண்களின் கருப்பையானது ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்னும் இரு ஹார்மோன்களில், டெஸ்டோஸ்டிரோன் குறைவான அளவிலும் ஈஸ்ட்ரோஜென் அதிகமான அளவிலும் சுரக்கிறது.

சில பெண்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக சுரந்தால் அவர்களின் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

பெண் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள்
முடி வளர்ச்சி

பெண்ணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக இருந்தால், அவர்களின் முகம், கன்னம், தாடை, மார்பு, முதுகு மற்றும் கால்கள் இது போன்ற உடல் உறுப்புகளில் முடி வளர்ச்சிகள் அதிகமாகும்.

அடிக்கடி முகப்பருக்கள்

ஒரு பெண்ணின் முகத்தில், முகப்பருக்கள் அடிக்கடி அதிக தொல்லைகள் ஏற்பட்டால், அது அப்பெண்ணின் உடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்துள்ளது என்று அர்த்தமாகும்.

மாதவிடாய் சுழற்சி

மாதந்தோறும் சீரான இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி நடைபெறாவிட்டால், அது அப்பெண்ணிற்கு பி.சி.ஓ.எஸ் என்னும் கோளாறுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

தலைமுடி உதிர்வு

தலைமுடியின் அடர்த்தி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே அதிக முடி உதிர்வுகள் இருந்தால், அது அவர்களின் உடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிககரித்துள்ளது என்று அர்த்தமாகும்.

கருப்பை பாதிப்பு

ஒரு பெண்ணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகம் இருந்தால், அட்ரினல் சுரப்பி அல்லது கருப்பையில் புதிய சதை வளர்ச்சியின் மூலம் ஏற்படும் கட்டியினால் பெண்குறியின் அளவு பெரிதாக இருக்கும்.

உடல் எடை அதிகரிப்பு

நமது உடலில் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் இருந்தால், திடீரென்று உடல் பருமனடைந்து, சர்க்கரை அல்லது உப்பு உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கச் செய்யும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்